உத்தரப் பிரதேசம்: திருமணத் தோல்வியில் தீக்குளித்த பெண்

உத்தரப் பிரதேசம்: திருமணத் தோல்வியில் தீக்குளித்த பெண்

1 mins read
78615f3e-cafb-4da5-a560-adabf5019dbe
-

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்னோ நகரைச் சேர்ந்த 36 வயது பெண் அம்மாநில சட்டசபைக் கட்டடத்தின் வெளியே தீக்குளித்தார்.

அந்நேரத்தில் கட்டட வளாகத்தில் நின்ற போலிசார் உடனே விரைந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றினர். அந்தப் பெண் உயிர் பிழைத்தபோதும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அகிலேஷ் திவாரி என்பவரை முதலில் திருமணம் செய்த அந்தப் பெண் அவரிடம் விவாகரத்து பெற்ற பிறகு மதம் மாறி ஆசிப் என்ற இளைஞரை திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு, ஆசிப் சவுதி அரேபியா சென்று விட்டார். ஆனால் அந்த பெண்ணை தற்போது மாமியார் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.

இது குறித்து தற்போது சமய ரீதியான சர்ச்சை சமூக ஊடகங்களில் உருவாகி வருகிறது