கேரளாவில் ஐக்கிய அரபு சிற்றரசின் துணைத் தூதரகம் மூடப்பட்டது

தங்கக் கடத்தல் விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரகம் திடீரென மூடப்பட்டிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

தங்கக் கடத்தல் தொடர்பாக தூதரக அதிகாரிகளிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த இருந்த நிலையில் தூதரகம் மூடப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரகம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தத் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கக் கடத்தல் நடைபெற்றது அண்மையில் அம்பலமானது.

இது தொடர்பாக ஸ்வப்னா உள்ளிட்ட சிலர் கைதாகியுள்ளனர். தூதரகத்தில் 3 ஆண்டுகள் முக்கிய பொறுப்பில் பணியாற்றிய ஸ்வப்னா, பின்னர் கேரள அரசின் விண்வெளிப்பூங்கா திட்டப் பணியில் இணைந்தார். இந்த வேலையில் சேர்ந்த பிறகே தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி அவரும் மேலும் சிலரும் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது செயலாளர் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன.

ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சின் துணைத் தூதரை கேரள முதல்­வர் தமது அதி­கா­ரபூர்வ இல்­லத்­தில் சந்­தித்­துப் பேசி­ய­தாக வெளி­யான தக­வலை அவர் திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளார். இந்­நி­லை­யில் துணைத்­தூ­த­ர­கத்­தில் பணி­யாற்­றும் சில­ருக்­கும் தங்­கக் கடத்­த­லில் தொடர்­பி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. எனவே, அவர்­க­ளை­யும் விசா­ரணை வளை­யத்­துக்­குள் கொண்­டு­வர தேசி­யப் புல­னாய்வு முகமை முடிவு செய்­துள்­ளது.

ஆனால் இத்­த­கைய பர­ப­ரப்­பான சூழ்­நி­லை­யில் துணைத்­தூ­த­ர­கம் திடீ­ரென மூடப்­பட்­டி­ருக்­கிறது. வரும் 20ஆம் தேதி வரை தூத­ர­கம் இயங்­காது என­வும் அது­வரை விசா வழங்­கு­வது உள்­ளிட்ட பணி­கள் நிறுத்தி வைக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தூத­ரக அதி­கா­ரி­களை விசா­ரிக்­க­வேண்­டும் என தேசியப் புல­னாய்வு முகமை தக­வல் தெரி­வித்த நிலை­யில் தூத­ர­கத்தை மூடி­யி­ருப்­பது சில கேள்­வி­க­ளை­யும் சந்­தே­கங்­க­ளை­யும் எழுப்பி இருப்­ப­தாக இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

இதற்­கி­டையே, துணைத் தூத­ர­கத்தை ஹைத­ரா­பாத்­துக்கு மாற்ற முயற்சி நடப்­ப­தா­க­வும் ஊட­கச் செய்தி மேலும் தெரி­விக்­கிறது. தூத­ரக அதி­கா­ரி­கள் விசா­ரிக்­கப்­ப­டும்­போது மேலும் பல முக்­கி­யத் தக­வல்­கள் வெளி­யா­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, தங்­கக் கடத்­த­லில் முக்­கி­யப் பங்கு வகித்த ஸ்வப்­னா­வுக்கு இந்­திய அம­லாக்­கத் துறை தொடுத்­துள்ள வழக்­கில் பிணை கிடைத்­துள்­ளது. எனி­னும் இவர்­மீது காபி­போசா சட்­டத்­தின்­கீழ் சுங்க இலாகா வழக்கு தொடுத்­தி­ருப்­ப­தால் பிணை கிடைத்­தும் வெளியே வர­மு­டி­ய­வில்லை.

இந்­நி­லை­யில் ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சின் தூத­ர­கப் பெய­ரைப் பயன்­ப­டுத்தி ஸ்வப்னா உள்­ளிட்­ட­வர்­கள் 19 முறை தங்­கக் கடத்­த­லில் ஈடு­பட்­டது அம­லாக்­கத்­துறை விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!