ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை; 15 பேர் பலி

ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை; 15 பேர் பலி

1 mins read
39f6e743-c84d-4d0c-8248-26cf8ee2bae4
படம்: ஏஎஃப்பி -

ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் கனமழை நீடித்து வருகிறது. ஆந்திராவில் நேற்று முன்தினம் ஒரே நாளில்

சுமார் 24 செ.மீ. அளவுக்கு மழை பதிவானது. 15 பேர் பலியாகினர். கோதாவரி, ஸ்ரீகாகுளம், விசாகப் பட்டினம், கிருஷ்ணா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது.

பல இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால் அப்பகுதிகள் இருளில் மூழ்கின.

ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி நாசமடைந்ததாகவும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே கனமழை காரணமாக தெலுங்கானாவில் ஒரு வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் அருகே உள்ள வீட்டில் குடியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.