70 விஞ்ஞானிகளுக்கு தொற்று

70 விஞ்ஞானிகளுக்கு தொற்று

1 mins read
992aa602-b6a1-42c3-8489-894a10fd92f3
படம்: ஊடகம் -

இந்­திய விண்­வெளி ஆய்­வுக் கழ­கத்­தில் பணி­யாற்­றும் 70க்கும் மேற்­பட்ட விஞ்­ஞா­னி­க­ளுக்­குக் கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்பு இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இத­னால் விண்­வெ­ளிக்கு மனி­தர்­களை அனுப்­பும் இஸ்­ரோ­வின் ககன்­யான் திட்­டம் தாம­த­ம­டைய வாய்ப்­புள்­ள­தாக அதன் தலை­வர் சிவன் தெரி­வித்­துள்­ளார்.

ககன்­யான் திட்­டத்­துக்­காக 10,000 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 2022ஆம் ஆண்டு இத்­திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­து­வ­தற்­கேற்ப பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. விண்­வெ­ளிக்கு அனுப்ப இந்­திய விமா­னப்­ப­டை­யைச் சேர்ந்த 4 விமா­னி­கள் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

அவர்களுக்கு விண்வெளிக்குச் செல்வது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்­நி­லை­யில் இஸ்­ரோ­வின் பல்­வேறு மையங்­களில் பணி­யாற்­றி­வ­ரும் 70க்கும் மேற்­பட்ட விஞ்­ஞா­னி­க­ளுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தால் ராக்­கெட் உதிரி பாகங்­கள் தயா­ரிக்­கும் பணி தொய்­வ­டைந்­துள்­ள­தாக சிவன் தெரி­வித்­துள்­ளார்.

எனவே, குறித்த காலத்­துக்­குள் ககன்­யான் திட்­டத்­தைச் செயல்­ படுத்த இய­லாத நிலை உரு­வாகி இருப்­ப­தா­க­வும் பணிகள் நீடித்து வருவதாகவும் அவர் மேலும் கூறி­உள்­ளார்.