மத்திய அரசுக்கு எதிராக அணிதிரளும் காஷ்மீர் கட்சிகள்

காஷ்­மீ­ருக்கு வழங்­கப்­பட்ட சிறப்பு தகுதியை மத்­திய அரசு திரும்­பப் பெற்­றதை ஏற்க இய­லாது என அம்­மா­நில முன்­னாள் முதல்­வர் மெக­பூபா முப்தி தெரி­வித்­துள்­ளார்.

காஷ்­மீ­ருக்­குச் சிறப்பு அதி­கா­ரம் வழங்­கிய 370வது பிரிவை மீண்­டும் கொண்­டு­வ­ரு­வ­தில் ஒரு­மித்த கருத்­து­டைய தரப்­பு­கள் இணைந்து செயல்­பட அவர் அழைப்பு விடுத்­துள்­ளார்.

கடந்­தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்­மீ­ருக்கு சிறப்பு அதி­கா­ரம் வழங்­கும் இந்­திய அர­சி­யல் சாச­னத்­தின் 370வது பிரிவை நீக்­கு­வ­தாக மத்­திய அரசு அறி­வித்­தது. மேலும் அங்­குள்ள அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் மற்­றும் பிர­மு­கர்­கள் வீட்­டுக் காவ­லில் வைக்­கப்­பட்­ட­னர். இவர்­களில் பலர் படிப்­ப­டி­யாக விடு­தலை செய்­யப்­பட்ட நிலை­யில் 14 மாதங்­க­ளுக்­குப் பிறகு மெக­பூபா முப்தி விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

இதை­ய­டுத்து ஒரு காணொ­ளிப் பதி­வைத் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் வெளி­யிட்­டுள்ள அவர், கடந்­தாண்டு ஆகஸ்ட் மாதம் மத்­திய அரசு எடுத்த முடி­வா­னது ஒரு பகல் கொள்­ளை­யைப் போன்­றது எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

சட்­ட­வி­ரோ­த­மா­க­வும் ஜன­நா­யக விரோ­த­மா­க­வும் பறிக்­கப்­பட்­ட­தைத் திரும்­பப்­பெற போரா­டு­வோம் என்­றும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் தங்­கள் வாழ்க்­கையை அர்ப்­ப­ணித்த காஷ்­மீர் பிரச்­சி­னைக்கு உரிய தீர்வு காண்­போம் என்­றும் மெக­பூபா தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் காஷ்­மீர் முன்­னாள் முதல்­வர் பரூக் அப்­துல்­லா­வும் அவ­ரது மகன் உமர் அப்­துல்­லா­வும் மெக­பூபா முப்­தியை அவ­ரது இல்­லத்­தில் சந்­தித்­துப் பேசி­னர். அப்­போது காஷ்­மீர் பிரச்­சி­னைக்­காக அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து போரா­டு­வது என முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக உமர் அப்­துல்லா தெரி­வித்­துள்­ளார்.

“தடுப்­புக் காவ­லில் இருந்து விடு­த­லை­யான நிலை­யில் மெக­பூ­பா­வின் உடல்­ந­லம் குறித்து விசா­ரித்­த­றிய அவ­ரைச் சந்­தித்­த­தா­க­வும் காஷ்­மீர் நல­னுக்­கான குப்­கார் பிர­க­ட­னம் தொடர்­பாக நடை­பெற உள்ள கூட்­டத்­தில் பங்­கேற்க அழைப்பு விடுத்­த­தா­க­வும் உமர் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் காஷ்­மீ­ரில் உள்ள பல்­வேறு அர­சி­யல் கட்­சி­கள் 370வது சட்­டப்­பி­ரிவை மீண்­டும் அமல்­ப­டுத்­தக்­கோரி மத்­திய அர­சுக்கு எதி­ராக ஒருங்­கி­ணைந்து போரா­டத் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!