உணவால் பரவும் நோய்: $15 பில்லியன் இழப்பு

2 mins read

இந்­தி­யா­வில் உண­வு­கள் மூல­மா­கப் பல்­வேறு நோய்­கள் பர­வு­வ­தாக மத்­திய சுகா­தார அமைச்­சர் ஹர்ஷ்­வர்­தன் தெரி­வித்­துள்­ளார்.

மேலும் இத்­த­கைய நோய்­க­ளால் ஆண்­டு­தோ­றும் 15 பில்­லி­யன் டாலர் அள­வி­லான பொரு­ளா­தார இழப்பு ஏற்­ப­டு­வ­தாக அவர் கூறி­யுள்­ளார்.

'சரி­யான உணவை உட்­கொள்­ளும் இந்­தியா 2050' என்ற இயக்­கத்தை மத்­திய அரசு தொடங்­கு­கிறது. இது­தொ­டர்­பாக நேற்று முன்­தி­னம் ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றது.

இக்­கூட்­டத்­துக்­குத் தலை­மை­யேற்­றுப் பேசி­ய­போது ஹர்ஷ்­வர்­தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

தற்­போது குழந்­தை­கள் மத்­தி­யில் உணவை வீணாக்­கும் விகி­தம் 21 விழுக்­கா­டாகவும் எடை குறைந்த குழந்­தை­கள் விகி­தம் 36 விழுக்­கா­டா­க­வும் உள்­ளது என்­றும் ஹர்ஷ்­வர்­தன் சுட்­டிக்­காட்­டி­னார். மேலும் 38 விழுக்­காடு குழந்­தை­கள் மத்­தி­யில் வளர்ச்சி குறை­பாடு காணப்­ப­டு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

நாட்­டில் 50 விழுக்­காடு பெண்­களும் குழந்­தை­களும் ரத்­த­சோ­கை­யால் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், ஆண்­கள் மத்­தி­யில் உடல் பரு­மன் அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் கூறி­னார்.

கடந்த 10 ஆண்­டு­களில் ஆண்­கள் மத்­தி­யில் 9.3 விழுக்­கா­டாக இருந்த உடல் பரு­மன் விகி­தம் தற்­போது 18.6 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ளது என்று குறிப்­பிட்ட அவர், இந்த விகி­தாச்­சா­ரம் பெண்­கள் மத்­தி­யில் 12.6 விழுக்­காடு என்­ப­தி­லி­ருந்து 20.7 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ளது என்­றார்.

"அதே­வே­ளை­யில் தொற்றா நோய்­கள் கார­ண­மாக ஏற்­படும் இறப்புகளும் நாட்­டில் அதி­க­ரித்­துள்­ளன. எனவே, புதிய யுக்­தி­களை வகுக்­க­வும் அதற்­கேற்ப செயல்­களை ஒருங்­கி­ணைக்­க­வும் இலக்கை அடை­வ­தற்­கும் பொது­வான தளம் தேவைப்­ப­டு­கிறது.

"அத்­த­கை­ய­தொரு தளத்தை அமைப்­ப­தற்கு அனை­வ­ரும் இணைந்து செயல்­ப­ட­வேண்டி உள்­ளது," என்று ஹர்ஷ்­வர்­தன் தெரி­வித்­தார்.

மேலும், உணவு வாயி­லா­கப் பர­வும் நோய்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்து­வ­தன் மூலம் பொரு­ளா­தார இழப்­பு­க­ளைக் குறைக்­க­மு­டி­யும் என்­றும் அவர் குறிப்பிட்டார்.

இதைச் சாத்­தி­ய­மாக்­கவே இந்­திய உண­வுப் பாது­காப்பு மற்­றும் தர­நிர்­ணய ஆணை­யம் 2050 வரை செயல்­ப­டுத்த வேண்­டிய நட­வ­டிக்­கை­க­ளைத் துவங்­கி­யுள்­ள­தாக அவர் மேலும் தெரி­வித்­தார்.