கொவிட்-19 இறங்குமுகம்; பட்டியலில் இரண்டாவது நிலைக்கு இறங்கிய இந்தியா

அன்­றா­டம் கொவிட்-19 நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளைப் பதிவு செய்­யும் நாடு­க­ளின் பட்­டி­ய­லில் இந்­தியா இரண்­டா­வது நிலைக்கு இறங்­கி­யுள்­ளது. உல­கி­லேயே ஆக அதி­க­மான நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளைப் பதிவு செய்­துள்ள அமெ­ரிக்கா, மீண்­டும் முதல்­நி­லைக்­குத் திரும்­பி­யுள்­ளது.

ஆகஸ்ட் 6ஆம் தேதி­யி­லி­ருந்து ஒவ்­வொரு நாளும் உல­கி­லேயே ஆக அதி­க­மான நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­களை இந்­தியா பதிவு செய்து வந்­தது.கடந்த வியா­ழன், வெள்­ளிக்­கி­ழமை ஆகிய இரு நாட்­க­ளாக இந்­தி­யா­வை­விட அதி­க­மான நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­களை அமெ­ரிக்கா பதிவு செய்­துள்ளது.

அமெ­ரிக்­கா­வில் கடந்த வியாழக்­கி­ழமை 66,131 பேருக்­கும் வெள்ளிக்­கி­ழமை 71,687 பேருக்­கும் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. மாறாக, இந்­தி­யா­வில் கடந்த வியா­ழக்­கி­ழமை 64,237 பேருக்­கும் வெள்­ளிக்­கி­ழமை 62,587 பேருக்­கும் தொற்று உறு­தி­யா­னது.

இரு மாதங்­கள், 11 நாட்­க­ளுக்­குப் பிறகு உல­கி­லேயே ஒரே­நா­ளில் ஆக அதி­க­மான நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அமெ­ரிக்­கா­வில் கடந்த வியா­ழக்­கி­ழமை பதி­வா­கின. அது­வரை இந்­தி­யா­தான் பட்­டி­ய­லில் முத­லி­டம் வகித்து வந்­தது.

அமெ­ரிக்­கா­வில் இது­வரை மொத்­தம் 8.3 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு நோய்த்­தொற்று உறு­தி­யா­கியுள்ளது. இந்­தி­யா­வில் அந்த எண்­ணிக்கை 7.5 மில்­லி­ய­னாக உள்­ளது.அடுத்த ஒரு சில நாட்­க­ளுக்கு அமெ­ரிக்­கா­வில்­தான் ஆக அதி­க­மா­னோ­ருக்கு அன்­றா­டம் தொற்று உறுதி செய்­யப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ‘டைம்ஸ் ஆஃப் இந்­தியா’ இணை­யத்­த­ளம் குறிப்­பி­டு­கிறது. அமெ­ரிக்­கா­வில் கடந்த மாதம் நோய்த்­தொற்று மீண்­டும் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­ய­தும் இந்­தி­யா­வில் தொற்று படிப்­ப­டி­யா­கக் குறைந்து வரு­வ­தும் அதற்­குக் கார­ணம்.

இந்­தி­யா­வில் செப்­டம்­பர் 17ஆம் தேதி நோய்த்­தொற்று உச்­சத்தை எட்­டி­யது. அன்­றைய தினம் 98,000க்கும் அதி­க­மான சம்­ப­வங்­கள் பதி­வாகி இருந்­தன. அதைத் தொடர்ந்து அந்­நாட்­டில் தொற்று எண்­ணிக்கை குறைந்து வரு­கிறது.

மாறாக, அமெ­ரிக்­கா­வில் மூன்­றா­வது நோய்த்­தொற்று அலை எழுந்துள்ளதா­கத் தெரி­கிறது. குறிப்­பி­டும்­ப­டி­யாக, இந்­தி­யா­வில் நோய்த்­தொற்று இறங்­கு­மு­கம் காணத் தொடங்­கிய அதே செப்­டம்­பர் மாத நடுப்­ப­கு­தி­யில்­தான் அமெ­ரிக்­கா­வில் நோய்ப் பர­வல் மீண்­டும் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யது. அமெ­ரிக்­கா­வில் இது­வரை ஏறத்­தாழ 223,000 பேர் கொவிட்-19க்கு உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். இந்­தி­யா­வில் இது­வரை உயி­ரி­ழப்பு எண்­ணிக்கை ஏறக்­கு­றைய 114,000 ஆக உள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் மேலும் 61,871 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்சு நேற்று அறி­வித்­தது. ஒரே­நா­ளில் 1,033 பேர் நோய்த்­தொற்­றால் உயி­ரி­ழந்­த­னர். இரு­ வா­ரங்­க­ளுக்­குப் பிறகு இந்­தி­யா­வில் கொவிட்-19க்கு ஒரே­நா­ளில் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 1,000ஐ கடந்து இருக்­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon