385 மருத்துவர்கள் கேரளாவில் பணி நீக்கம்

கொரோனா கிரு­மித்­தொற்­றின் தாக்­கம் அதி­க­ரித்து வரும் நிலை­யில் பணிக்கு வரா­மல் விடுப்பு எடுத்த 385 மருத்­து­வர்­களை கேரள அரசு பணி­நீக்­கம் செய்­துள்­ளது. இந்த அதி­ரடி நட­வ­டிக்கை அரசு மருத்­து­வர்­களை அதிர்ச்சி அடைய வைத்­துள்­ளது.

கொரோனா காலத்­தில் மருத்­து­வர்­கள் செவி­லி­யர்­க­ளின் பணி மிக­வும் முக்­கி­ய­மா­னது என்­றும், அவர்­க­ளின் சேவை அவ­சி­யம் தேவை என்­றும் கேரள சுகா­தார அமைச்­சர் கே.கே.சைலஜா தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா காலத்­தில் ஏரா­ள­மான மருத்­து­வர்­களும் மருத்­து­வப் பணி­யா­ளர்­களும் அதி­கா­ர­பூர்­வ­மற்ற விடுப்பு எடுத்­தி­ருப்­ப­தாக அறிக்கை ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

385 மருத்­து­வர்­கள் உள்­பட 432 மருத்­து­வப் பணி­யா­ளர்­க­ளுக்கு இறுதி எச்­ச­ரிக்கை அளித்­தும் பணிக்கு வர­வில்லை என்­றும், இதன் கார­ண­மா­கவே பணி­யில் இருந்து நீக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் அமைச்­சர் சைலஜா விளக்­கம் அளித்­துள்­ளார்.

பணி­நீக்­கம் செய்­யப்­பட்­ட­வர்­களில் சுகா­தா­ரத்­துறை ஆய்­வா­ளர்­கள், மருந்­தா­ளு­நர்­கள், செவி­லி­யர்­கள், மருத்­துவ உத­வி­யா­ளர்­கள், ரேடி­யா­கி­ரா­ஃபர்­கள் ஆகி­யோ­ரும் அடங்­கு­வர் என அவர் தெரி­வித்­துள்­ளார்.

கேரள மாநி­லம் முன் எப்­போ­தும் இல்­லாத மருத்­துவ அவ­ச­ர­நி­லையை, சிக்­கலை எதிர்­கொண்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள அமைச்­சர் சைலஜா, சுகா­தா­ரத்­துறை முழு­வீச்சில் கொரோனா கிரு­மித்­தொற்றை எதிர்த்­துப் போராடி வரு­வ­தாக கூறி­யுள்­ளார்.

“இந்த நேரத்­தில் தேவை­யின்றி விடுப்பு எடுத்து பணி­யைச் செய்­யா­மல் இருப்­பது ஒழுக்­கக்­கே­டா­கும். பணி செய்­யும் மற்ற பணி­யா­ளர்­க­ளின் நேர்­மை­யை­யும் இத்­த­கைய போக்கு குலைத்­து­வி­டும்.

“இதே போல் மருத்­து­வர்­களும் மருத்­து­வப் பணி­யா­ளர்­களும் தொடர்ந்து நடந்துகொண்­டால் அவர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்,” என அமைச்­சர் சைலஜா எச்­ச­ரித்­துள்­ளார்.

முன்­ன­தாக அதி­கா­ர­பூர்­வ­மற்ற விடுப்­பில் சென்ற 46 மருத்­து­வர்­க­ளுக்கு உட­ன­டி­யாக பணிக்­குத் திரும்­பும்படி எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. அவர்­கள் அதைப் பொருட்­ப­டுத்­தா­த­தால் பணி­யில் இருந்து நீக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கொரோனா வேளையில் விடுப்பு எடுத்ததால் நடவடிக்கை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!