இந்தியா: எல்லா ஒப்பந்தங்களையும் சீனா புறக்கணித்துவிட்டது

லடாக் உள்­ளிட்ட எல்­லைப் பகு­தி­யில் அமை­தி­யான சூழலை ஏற்­ப­டுத்த இந்­தியா தொடர்ந்து முயற்சி மேற்­கொண்டு வரு­வ­தாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய அவர், எல்­லை­யில் அமை­திக்குப் பாதிப்பு ஏற்­பட்­டால் இரு நாடு­க­ளுக்கு இடை­யே­யான உற­வும் பாதிக்­கப்­படும் என்­றார்.

கடந்த ஜூன் மாதம் எல்­லை­யில் இந்­தியா, சீனா இடையே நிகழ்ந்த மோதல்­கள் பொது மற்­றும் அர­சி­யல் தளங்­களில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தாக குறிப்­பிட்ட அவர், இதன் கார­ண­மாக இரு­த­ரப்­புக்­கும் இடை­யே­யான உறவு மோச­ம­டைந்­துள்­ள­தாக தெரி­வித்­தார்.

“கடந்த முப்­பது ஆண்­டு­களில் சீனா­வு­டன் ஓர் இயல்­பான உறவை இந்­தியா வளர்த்து வந்­தது. இந்த உற­வின் அடிப்­ப­டையே, எல்­லைப் பகு­தி­யில் அமை­தி­யை­யும் ஒழுங்­கை­யும் பேணு­வ­து­தான்.

“1993 முதல் இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான எல்­லை­யில் ராணு­வப் படை­களைக் குறைத்து அமை­தியை ஏற்­ப­டுத்­தும் பல ஒப்­பந்­தங்­கள் உள்­ளன. மேலும் எல்­லை­களை எவ்­வாறு பரா­ம­ரிப்­பது மற்­றும் எல்­லை­யில் துருப்­புக்­களை எவ்­வாறு நிறுத்­து­வது என்­பதை இந்த ஒப்­பந்­தங்­கள் தீர்­மா­னிக்­கின்­றன,” என்று அமைச்­சர் ஜெய்­சங்­கர் சுட்­டிக்­காட்­டி­னார்.

இந்­நி­லை­யில் இரு­த­ரப்­புக்­கும் இடை­யேயான ஒப்­பந்­தங்­கள் அனைத்­தும் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், எல்­லை­யில் அதிக எண்­ணிக்­கை­யி­லான சீன துருப்­புக்­களை நிறுத்­து­வது ஒப்­பந்­தத்­துக்கு முர­ணா­னது என்­றார்.

எத­னால் சீனா, இந்­திய படை­கள் மீது தாக்­கு­தல் நடத்­தி­யது என்­ப­தற்­கான விளக்­கம் தம்­மி­டம் இல்லை என்று குறிப்­பிட்ட ஜெய்­சங்­கர், தற்­போது எல்­லை­யில் உள்ள ஏரா­ள­மான வீரர்­கள் ஆயு­தங்­களை வைத்­தி­ருக்க நேரிட்­டுள்­ளது என்­றும் தற்­போ­தைய சூழல் நாட்­டின் பாது­காப்பு அம்­சத்­துக்­கான சவால் என்­றும் கூறினார்.

இந்­திய நிலப்­ப­கு­தி­யின் ஓர் அங்­கு­லத்­தைக் கூட சீனா­வுக்கு விட்­டுத் தராது முடி­யாது என்று மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா தெரி­வித்­துள்­ளார். போருக்கு சீனா தயார் என்­றால், இந்­தி­யா­வும் எப்­போ­துமே தயார் என்­றும் அவர் சீன அதிபரின் அண்மைய பேச்சுக்குப் பதி­லடி கொடுத்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!