இந்தியா, பங்ளாதேஷ் இடையே விமானச் சேவை

 இந்தியா-பங்ளாதேஷ் இடையே மீண்டும் விமானச் சேவை தொடங்க உள்ளது.

‘ஏர் பப்பிள்’ எனும் நடைமுறையின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகளுக்கு உட்பட்டு எதிர்வரும் 28ஆம் தேதி முதல் விமானச் சேவை தொடங்கும் எனத் தெரிகிறது.

ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், விஸ்தாரா, கோஏர் ஆகிய ஐந்து இந்திய விமான நிறுவனங்களும் பிமான் பங்ளாதேஷ் ஏர்லைனஸ், யுஎஸ்-பங்ளா ஏர்லைன்ஸ் மற்றும் நோவா ஏர்லைன்ஸ் ஆகிய மூன்று பங்ளாதேஷ் விமான நிறுவனங்களும் தங்களது சேவையைத் துவங்க உள்ளன.

கடந்த ஜூலை முதல் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் ‘ஏர் பப்பிள்’ முறையில் இந்தியாவில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon