மதுரை - சென்னை - மும்பை தடத்தில் ஏர் இந்தியா விமானச் சேவை மீண்டும் தொடக்கம்

கொரோனா கிருமிப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்ட மும்பை - மதுரை விமானச் சேவை வரும் 25ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என மதுரையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சென்னை வழியாக இவ்விரு நகரங்களுக்கும் இடையே தினசரி விமானச் சேவைகள் இயங்கி வந்தன.
 
வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் காலை 9.15 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு, காலை 11.15 மணிக்கு சென்னை வந்தடையும் விமானம், அங்கிருந்து பிற்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.10 மணிக்கு மதுரை சென்று சேரும்.

அதன்பின்னர் அதே விமானம் மதுரையில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு சென்னை செல்லும். அங்கிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு மும்பையை அடையும். 

பயணிகளின் வருகையை பொறுத்து விமானச் சேவைக்கான கட்டணத்தில் மாறுபாடு இருக்கலாம். இதற்கான டிக்கெட்டுகளுக்கு www.airindia.in என்ற இணையதளத்திலும், மதுரை விமான நிலையத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon