ஹைதராபாத்தை உலுக்கிய கனமழை, வெள்ளம்

இந்­தி­யா­வின் ஹைத­ரா­பாத் நக­ரில் கன­மழை கார­ண­மாக வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ளது. அண்­மைய ஆண்டு­களில் இப்­ப­டிப்­பட்ட மோச­மான வெள்­ளத்தை ஹைத­ரா­பாத் எதிர்­நோக்­கி­ய­தில்லை என போலி­சார் தெரி­வித்­த­னர். இதில் குறைந்­தது மூன்று பேர் உயி­ரிந்­த­னர். மாண்­ட­வர்­களில் இரண்டு குழந்­தை­களும் அடங்­கு­வர்.

கடந்த நூறாண்­டு­களில் ஹைத­ரா­பாத் கண்­டி­ராத கன­ம­ழை­யால் ஏரி­களும் நதி­களும் நிரம்பி, சாலை­களில் வெள்­ளம் கரைபுரண்­டோ­டி­யது. ஹைத­ரா­பாத் நக­ரி­லும் புற­ந­கர்ப் பகு­தி­க­ளி­லும் உள்ள தாழ்­வான பகு­தி­களில் வெள்­ளம் புகுந்­தது.

வெள்­ளம் கார­ண­மாக மொத்­தம் 37,409 குடும்­பங்­கள் பாதிக்­கப்­பட்­டன. வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்ள இடங்­களில் வசிப்­ப­வர்­களை அங்­கி­ருந்து பத்­தி­ர­மாக வெளி­யேற்­றும் பணி­யில் ஹைத­ரா­பாத் நக­ராட்சி மன்ற அதி­கா­ரி­களும் மீட்­புப் பணி­யா­ளர்­களும் தீவி­ர­மா­கச் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

பல குடி­யி­ருப்­புக் கட்­ட­டத் தரைத்­த­ளங்­களில் வெள்­ள­நீர் புகுந்­தது. முழங்­கால் உய­ரத்­துக்கு தண்­ணீர் இருந்­த­தா­க­வும் இந்­திய ஊட­கம் தெரி­வித்­தது.

ஆட்டோ ரிக்­‌ஷாக்­களை வெள்­ளம் அடித்­து­க்கொண்டு செல்­வ­தைக் காட்­டும் காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் வலம் வந்­தது.

இந்­நி­லை­யில், கர்­நா­டக மாநி­லத்­தின் நான்கு மாவட்­டங்­களில் வெள்ளநிலை மோச­மாக இருக்­கிறது.

வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்ள இடங்­களில் சிக்­கித் தவிப்­போரை மீட்­கும் பணி­யில் இந்­திய ராணுவ வீரர்­கள், தேசிய பேரி­டர் நிர்­வாக அமைப்­பைச் சேர்ந்த மீட்­புப் பணி­யா­ளர்­கள் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

பாதிக்­கப்­பட்ட மாவட்­டங்­களில் உள்ள சில கிரா­மங்­கள் வெள்­ளத்­தில் முழு­மை­யாக மூழ்­கி­விட்­ட­தாக கர்­நா­டக முதல்­வர் பிஎஸ். எடி­யூ­ரப்பா தெரி­வித்­துள்­ளார்.

நாளை ஹெலி­காப்­ட­ரில் சென்று அவ்­வி­டங்­க­ளைப் பார்­வை­யிட்டு அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­யைத் விரைவில் நடைமுறைப்படுத்தப் போவதாக அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!