தங்கக் கடத்தல்: கேரள ஐஏஎஸ் அதிகாரி எந்நேரத்திலும் கைது

பாகிஸ்தான் உளவு அமைப்புக்குத் தொடர்பு உள்ளதாக புலனாய்வு முகமை சந்தேகம்

திரு­வ­னந்­தபுரம்: கேரள தங்­கக் கடத்­தல் வழக்கு தொடர்­பில் மாநில அர­சின் முன்­னாள் முதன்­மைச் செய­லர் சிவ­சங்­கர் எந்­நே­ரத்­தி­லும் கைதாக வாய்ப்­புள்­ளது என வெளி­யான தக­வல் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

தங்­கக் கடத்­த­லில் அவ­ருக்­கும் தொடர்பு இருப்­ப­தா­க­வும் அதற்­கு­ரிய ஆதா­ரங்­கள் சுங்­கத்­து­றை­யி­டம் இருப்­ப­தா­க­வும் ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

திரு­வ­னந்­த­பு­ரத்­தில் உள்ள ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சின் தூத­ர­கப் பெய­ரைப் பயன்­ப­டுத்தி தங்­கக் கடத்­தல் நடந்­தது அண்­மை­யில் அம்­ப­ல­மா­னது. இது தொடர்­பாக கேரள அரசு அதி­காரி ஸ்வப்னா சுரேஷ் உள்­ளிட்ட பலர் கைதா­கி­னர்.

இந்­தக் கடத்­த­லில் கேரள முன்­னாள் முதன்­மைச் செய­லா­ளர் சிவ­சங்­க­ருக்­கும் தொடர்பு உள்­ள­தாக கூறப்­பட்­டது. சிவ­சங்­க­ரு­டன் தனக்கு இருந்த நெருக்­கத்­தைப் பயன்­ப­டுத்தி ஸ்வப்னா அவ­ரி­டம் பல்­வேறு உத­வி­க­ளைக் கேட்­டுப் பெற்­ற­தா­க­வும் தெரி­கிறது.

கடந்த சில வாரங்­க­ளா­கத் தங்­கக் கடத்­தல் குறித்து மத்­திய அம­லாக்­கத் துறை­யும் சுங்­கத்­துறை­யும் தீவிர விசா­ரணை நடத்தி வந்­தன. சிவ­சங்­க­ரி­டம் தேசி­யப் புல­னாய்வு முக­மை­யின் அதி­கா­ரி­கள் கிடுக்­கிப்­பிடி விசா­ரணை நடத்­தி­னர்.

இக்­க­டத்­த­லில் கேரள முதல்­வர் பின­ராயி விஜ­ய­னின் பெய­ரும் அடி­பட்­டது. எனி­னும் தமக்கு இது­கு­றித்து ஏதும் தெரி­யாது என முதல்­வர் தரப்­பில் திட்­ட­வட்­ட­மாக மறுப்பு தெரி­விக்­கப்­பட்­டது.

கைது செய்­யப்­பட வாய்ப்­புள்­ள­தா­கத் தக­வல் வெளி­யா­னதை அடுத்து தமக்கு முன்­பிணை வழங்­கக் கோரி திரு­வ­னந்­த­பு­ரம் உயர்­நீ­தி­மன்­றத்தை அணு­கி­னார் சிவ­சங்­கர். அக்­டோ­பர் 23ஆம் தேதி வரை அவ­ரைக் கைது செய்ய தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய சூழ­லில் நெஞ்­சு­வலிப்­ப­தாக சிவ­சங்­கர் கூறி­யதை அடுத்து தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அவர் அனு­ம­திக்­கப்­பட்­டார். அதே மருத்­து­வ­ம­னை­யில் அவ­ரது மனைவி மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்­று­கி­றார்.

பரி­சோ­த­னை­யில் சிவ­சங்­க­ருக்கு இத­யம் சம்­பந்­தப்­பட்ட பிரச்­சினை ஏதும் இல்லை என்று உறு­தி­யா­னது. எனி­னும் முது­குத் தண்­டு­வ­டத்­தில் பிரச்­சினை உள்­ள­தா­கக் கூறி திரு­வ­னந்­த­பு­ரம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அவர் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில் அம்­ம­ருத்­து­வ­ம­னையை தேசி­யப் புல­னாய்வு மற்­றும் சுங்­கத் துறை அதி­கா­ரி­கள் தீவி­ர­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. மேலும் சிவ­சங்­கர் சிகிச்சை பெறும் பிரிவு உள்ள பகு­தி­யில் மத்­திய ரிசர்வ் பாது­காப்­புப் படை வீரர்­க­ளைப் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்த அதி­கா­ரி­கள் முடிவு செய்­துள்­ள­தா­க­வும் இந்­திய ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

முன்­பிணை நீட்­டிக்­கப்­ப­டாத அல்­லது சிகிச்சை முடி­யும் பட்­சத்­தில் சிவ­சங்­கர் அதி­ர­டி­யா­கக் கைது செய்­யப்­ப­டு­வார் எனத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே கேரள பாணி­யில் ராஜஸ்­தான், டெல்­லி­யி­லும் அண்­மை­யில் தங்­கக்­க­டத்­தல் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­துள்­ளன. இரு மாநி­லங்­க­ளி­லும் சேர்த்து நூறு கிலோ­வுக்­கும் மேற்­பட்ட கடத்­தல் தங்­கத்தை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­துள்­ள­னர். இந்­தக் கடத்­த­லுக்­கும் பாகிஸ்­தா­னின் ஐஎஸ்ஐ உளவு அமைப்­புக்­கும் தொடர்பு இருக்­க­லாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

இந்­தி­யா­வுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­க­வும் தீவி­ர­வாத அமைப்­பு­க­ளுக்கு உத­வும் வகை­யி­லும் இந்­தத் தங்­கக் கடத்­தல்­கள் அரங்­கேறி வரு­வ­தாக புல­னாய்வு அமைப்­பு­கள் சந்­தே­கிக்­கின்­றன.

இந்தக் கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!