தமிழ்த்துறைக்கு நிதி திரட்டும் புலம்பெயர் தமிழர்கள்

லண்­டன் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தமிழ்த்­துறை கடந்த 20 ஆண்­டு­க­ளாக முடங்­கிக் கிடப்­ப­தா­கத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

நிதிப்­பற்­றாக்­கு­றையே இதற்­குக் கார­ணம் எனக் கூறப்­ப­டு­வதை அடுத்து தமிழ்த் துறைக்கு உயி­ரூட்ட புலம்பெயர் தமி­ழர்­கள் முயற்சி மேற்­கொண்­டுள்­ள­னர்.

லண்­டன் பல்­க­லைக்­க­ழ­கம் தொடங்­கப்­பட்ட முத­லாம் ஆண்­டி­லேயே 20 மொழித் துறை­களில் ஒன்­றாக தமிழ்த் துறை­யும் தொடங்­கப்­பட்­டது. அங்கு தமி­ழில் இளங்­கலை, முது­கலை மற்­றும் முனை­வர் பட்­டங்­க­ளுக்­கான கல்­வியை மேற்­கொள்­ளும் வசதி இருந்­தது.

பல்­க­லைக்­க­ழக நூல­கத்­தில் தமிழ் தொடர்­பாக 150,000 ஆவ­ணங்­கள், ஓலைச்­சு­வ­டி­கள் மற்­றும் நூல்­கள் உள்­ளன. இப்­பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தமி­ழில் இளங்­கலை பட்­டம் பெற்ற முதல் ஆங்­கி­லே­ய­ரான எம்.எஸ்.எச். தாம்­சன், மறை­மலை அடி­க­ளின் மாண­வ­ரா­வார்.

கடந்த 2000ஆம் ஆண்­டில் தமிழ்த் துறை மூடப்­பட்­டது. எனவே, இத்­து­றைக்கு மீண்­டும் உயி­ரூட்­டும் முயற்­சி­யில் வெளி­நாட்டு வாழ் தமி­ழர்­கள் பலர் ஒருங்­கி­ணைந்து ‘ஐக்­கிய ராஜ்ய தமிழ்க் கல்வி’ என்ற அமைப்பை ஏற்­ப­டுத்தி உள்­ள­னர்.

லண்­டன் பல்­க­லைக்­க­ழக தமிழ்த் துறையை மீண்­டும் தொடங்க நெடுங்­கால வைப்பு நிதி­யாக 100 கோடி ரூபாய் தேவைப்­ப­டு­வ­தா­க­வும் இதற்­காக நிதி திரட்­டப்­ப­டு­வ­தா­க­வும் அந்த அமைப்­பின் செய்­தித் தொடர்­பா­ளர் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!