வெளி­நாடுகளில் குடி­யேறுவதிலும் அங்கு குடி­யு­ரிமை பெறு­வ­திலும் 2வது இடத்தில் இந்தியர்கள்

வெளி­நாடுகளில் குடி­யேறுவதிலும் அங்கு குடி­யு­ரிமை பெறு­வ­திலும் 2வது இடத்தில் இந்தியர்கள்

1 mins read
88b0b4ab-8b85-46e5-bdba-94354e947f9a
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உல­கி­லேயே வெளி­நாடுகளுக்கு குடி­யேறுவதிலும் குடியேறிய நாடுகளில் நிரந்தரக் குடி­யு­ரிமை பெறு­வ­திலும் இந்தியர்கள் முன்­னிலை வகிக்­கின்றனர்.

இருந்­தா­லும் சீனா தொடர்ந்து இந்­தப் பட்­டி­ய­லில் முதல் இடத்­தில் உள்­ளது. இந்­தியா, 2வது இடத்­தில் இருந்த ருமே­னி­யாவை பின்­னுக்­குத் தள்ளி முன்­னே­றி­யி­ருக்­கிறது.

2018ல் 4.3 லட்­சம் சீனர்­கள் (430,000 பேர்) அமெ­ரிக்கா, கனடா, ஆஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட நாடு களுக்கு குடி­யேறியுள்ளனர்.

இது உல­கம் முழு­வ­தும் பல நாடு­க­ளிலிருந்து குடி­யேறிய மக்கள் தொகை­யில் 6.5 விழுக்­கா­டா­கும்.

அதே ஆண்­டில் இந்­தி­யாவி லிருந்து வெளி­நா­டு­க­ளுக்கு குடி யேறிய இந்­தி­யர்­க­ளின் எண்­ணிக்கை பத்து விழுக்­காடு கூடி 3.3 லட்­சத்தை (330,000) தொட்டு உள்­ளது.

இது, உலகின் மொத்த குடி யேற்றத்தில் ஐந்து விழுக்காடாகும்.

முந்தைய ஆண்டைவிட 2018ல் கனடாவுக்கு அதிகமானோர் குடி யேறியுள்ளனர். இதற்கு அடுத்ததாக ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடு களுக்கு அதிக அளவில் மக்கள் குடிபுகுந்துள்ளனர்.

அமெரிக்கா (52,194), கனடா(19,487), ஆஸ்திரே லியா(17,716), பிரிட்டன்(15,105) ஆகிய நாடுகளில் குடியேறிய இந்தியர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறுவதிலும் முன்னிலை வகிக்கின்றனர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தகவல் தெரிவித்தது.