இலங்கை, மாலத்தீவுக்கு பொம்பியோ பயணம்

இலங்கை, மாலத்தீவுக்கு பொம்பியோ பயணம்

1 mins read
e1e71d2a-a291-49a7-8fed-ed27b7b68a3c
மைக் பொம்பியோ. படம்: ஏஎஃப்பி -

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ இம்மாதம் இலங்கை, மாலத் தீவு ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இவ்வட்டாரத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை தடுக்கும் நோக்கத்தோடு அவரது பயணம் அமைகிறது.

இம்மாதம் 28ஆம் தேதி இலங்கையில் இரு தரப்பு பேச்சில் பங்கேற்பார் என்று இலங்கை வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

இலங்கைக்கு வருகையளிக்கும் அதே நாளில் அவர் மாலத் தீவுக்கும் செல்வார் என்று அவரது பயண ஏற்பாடுகளை செய்து வரும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.