எல்லை தாண்டிய வீரரை சீனாவிடம் ஒப்படைத்த இந்தியா

இந்­திய-சீன எல்­லை­யில் வழி தவறி இந்­தி­யா­வுக்­குள் நுழைந்த சீன வீரரை சீனா­வி­டம் இந்­தியா ஒப்­ப­டைத்­துள்­ளது.சென்ற திங்­கட்­கி­ழமை லடாக் எல்­லை­யில் உள்ள டெம்­சோக் என்ற பகு­தி­யில் சுற்­றித் திரிந்­து கொண்­டி­ருந்த சீன வீரரை இந்­திய ராணு­வத்­தி­னர் பிடித்து விசா­ரித்­த­னர்.

அப்­போது அவர், தன்­னிலை மறந்து தடு­மாற்­றத்­தில் இருந்­தார். மோச­மான வானி­லை­யால் அவர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தால் இந்­திய ராணு­வத்­தி­னர் அவ­ருக்கு முத­லு­த விகளைச் செய்­த­னர்.அவ­ரது சுவா­சத்தை சீர்­ப்ப­டுத்த பிராண வாயு அளிக்­கப்­பட்­ட­தா­க­வும் இந்­திய ராணு­வம் வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

கடந்த ஜூன் மாதம் லடாக் எல்­லை­யில் அமைந்­துள்ள கல்­வான் பள்­ளத்­தாக்­கில் இந்­திய-சீன வீரர்­க­ளி­டையே மோதல் ஏற்­பட்­டது.அப்­போ­தி­லி­ருந்து இரு நாடு ­க­ளுக்கும் இடையே பதற்­றம் நிலவி வரு­கிறது.

இதை­ய­டுத்து எல்­லைப் பூச­லைத் தவிர்ப்­ப­தற்­காக இரு நாட்டு ராணு­வ­மும் பல்­வேறு சுற்­றுப் பேச்­சு ­வார்த்­தை­களை நடத்தி வரும் வேளை­யில் சீன வீரர் ஒரு­வர் இந்­தி­யா­வுக்­குள் நுழைந்த சம்­ப­வம் நடந்­துள்­ளது. “சீன வீரர் பாது­காப்பு நடை­மு­றை­க­ளு­டன் முறைப்­படி புதன்­கி­ழமை காலை ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்,” என்று இந்­திய ராணு­வம் குறிப்­பிட்­டது. இதனை சீன ராணுவ நாளேடும் உறுதிப்படுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!