கொவிட்-19: தடுப்பூசி போட்டுக்கொள்ள 61% இந்தியர்கள் தயக்கம்

கொவிட்-19: தடுப்பூசி போட்டுக்கொள்ள 61% இந்தியர்கள் தயக்கம்

1 mins read
4712d37c-5d7f-4f0c-95ce-6e66cd7b7134
படம்: ராய்ட்டர்ஸ் -

கொவிட்-19 கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கிடைத்தாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அவசரப்பட மாட்டோம் என்று 61% இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அது பாதுகாப்பானதாக இருக்குமா என்பதே அவர்களது தயக்கத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் தடுப்பு மருந்து தயாரிக்கப்படுவதால் அவற்றின் பாதுகாப்புத் தன்மை பற்றி போதிய ஆய்வு நடத்தப்பட்டிருக்குமா என்ற கேள்வியைப் பலரும் முன்வைக்கின்றனர்.

'லோக்கல் சர்க்கிள்ஸ்' என்ற அமைப்பு, கொரோனா தடுப்பூசி தொடர்பில் நடத்திய கருத்தாய்வில் பங்கேற்றோரில் 12 விழுக்காட்டினர் மட்டுமே 'தடுப்பூசி போட்டுக்கொண்டு, கிருமித்தொற்றுக்கு முந்திய வாழ்க்கைக்குத் திரும்புவோம்' எனக் கூறினர்.

மேலும் 25 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயாராக இருந்தாலும் முந்தைய வாழ்க்கைமுறைக்குத் திரும்ப மாட்டோம் எனத் தெரிவித்தனர்.