மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 'பாஜகவிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்' எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
அதேபோல், 'பாஜகவிடம் இருந்து வங்கத்தைக் காப்போம்' எனும் இணையத்தளத்தில் இதுவரை 121,000 பேர் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதறிகிடையே பீகார் மாநில மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குவதாக பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
"நாட்டை ஆளும் கட்சி, ஒரு மாநில மக்களுக்கு மட்டும் இலவசமாகத் தடுப்பூசி வழங்குவதாக அறிவிக்கிறது. அப்படி எனில், மற்ற மாநிலங்கள் எல்லாம் பாகிஸ்தானா?" எனக் கேட்டுள்ளது மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா.
இதைப் பற்றி தனது 'சாம்னா' நாளேட்டில் கட்டுரை எழுதியுள்ள சிவசேனா, நாடு முழுவதுமே கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசியை வைத்து பாஜக கீழ்த்தரமான அரசியல் செய்வதாகச் சாடியுள்ளது.
தடுப்பூசி விவகாரத்தில் எல்லா மாநிலங்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

