அயோத்தியில் ஐந்து லட்சம் தீபங்கள் ஏற்ற முடிவு

தீபாவளிப் பண்டிகையையொட்டி நவம்பர் 11 முதல் மூன்று தினங்களுக்கு அயோத்தியில் தீப உற்சவம் நடைபெற உள்ளது. அச்சமயம் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றப்பட உள்ளன. 

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் குறைவான எண்ணிக்கையிலேயே பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படுவர் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

இந்த தீப உற்சவ நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் உருவாக உள்ள ராமர் கோவிலின் மாதிரி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பெரும் வணிக வளாகம் ஒன்றில் அதைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.

32 அடி உயரமும் 48 அடி அகலமும் கொண்ட இந்த மாதிரியை உருவாக்க 45 நாட்கள் ஆனது. 80 நிபுணர்கள் இதற்காக உழைத்துள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் மக்கள் மனத்தில் நேர்மறைச் சிந்தனைகளை ஏற்படுத்தும் வகையில் இந்த மாதிரி நிறுவப்பட்டுள்ளது.  படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon