பிரதமர் மோடி: எல்லாரும் திருக்குறள் படியுங்கள்

இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று வானொலி மூலம் தமிழ்­நாட்­டில் தூத்­துக்­கு­டி­யைச் சேர்ந்த சிகை அலங்­கார கடைக்­கா­ரர் ஒரு­வ­ரு­டன் தமி­ழில் உரை­யாடி மகிழ்ந்­தார். பிர­த­மர் மோடி, தான் பிர­த­ம­ராகப் பதவி ஏற்­றது முதல் ‘மன­தின் குரல்’ என்ற வானொலி நிகழ்ச்­சி­யின் மூலம் பொது­மக்­க­ளுக்கு உரை­யாற்றி வரு­கி­றார். திரு மோடி நேற்று தூத்­துக்­கு­டி­யைச் சேர்ந்த பொன் மாரி­யப்­பன் என்­ப­வ­ரு­டன் ‘வணக்­கம், நன்­றாக இருக்­கி­றீர்­களா’ என்று தமி­ழில் கைபேசி மூலம் நலம் விசா­ரித்­தார்.

திரு மாரி­யப்­பன் 8ஆம் வகுப்பு வரை­தான் படித்து இருந்­தா­லும் தனது சிகை அலங்­காரக் கடை­யில் பெரிய அள­வில் நூல­கத்தை அமைத்து எல்­லா­ரும் புத்­த­கங்­களைப் படிக்க ஊக்­கப்­ப­டுத்தி வரு­கி­றார். தன் கடைக்கு வந்து யார் அதிக புத்­த­கங்­க­ளைப் படிக்­கி­றார்­களோ அவர்­க­ளி­டம் குறை­வான கட்­ட­ணத்தை அவர் வசூ­லிக்­கி­றார்.

இதன் மூலம் பிர­ப­லம் அடைந்­துள்ள மாரி­யப்­ப­னு­டன் தொடர்­பு­கொண்ட பிர­த­மர், வாய்ப்பு கிடைத்­தால் அனை­வ­ரும் திருக்­கு­றள் படிக்க வேண்­டும் என்­றும் அந்த நூல் வாழ்க்­கைக்­கான வழி­காட்டி என்­றும் பெரு­மி­தத்­து­டன் தெரி­வித்து இருக்­கி­றார்.அனை­வ­ரும் தீபா­வளி போன்ற பண்­டிகைக் காலங்­களில் உள்­நாட்­டுப் பொருட்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் தர­வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்ட திரு மோடி, கொவிட்-19ன் தாக்­கம் இன்­ன­மும் அதி­க­மாக இருப்­ப­தால் சமூக இடை­வெளியைக் கடைப்­பி­டித்து மக்­கள் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

இந்­திய கலா­சா­ரம், காதி போன்ற இந்­திய உடை­க­ளுக்கு உல­க­ள­வில் முக்­கி­யத்­து­வம் கூடி வரு­வ­தைச் சுட்­டிய பிர­த­மர், புதுப்­புது தொழில்­நுட்­பங்­கள் மூலம் விவ­சா­யி­கள் புதிய வியா­பார உத்­தி­களை உரு­வாக்கி மேம்­ப­டு­வ­தற்­குத் தோதாக சட்­டங்­கள் இயற்­றப்­பட்டு இருப்­ப­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

இந்­தி­யாவை ஒன்­றி­ணைத்த சர்­தார் வல்­ல­பாய் பட்­டேல் சிர­மத்­தி­லும் நகைச்­சுவை உணர்வு உள்­ள­வர் என்­ப­தைச் சுட்­டிய திரு மோடி, இந்­தச் சிர­ம­மான கால­கட்­டத்­தி­லும் மகிழ்ச்­சி­யாக நாம் இருந்து வர­வேண்­டும் என்று குறிப்­பிட்­டார்.

தேசிய ஒருங்­கி­ணைப்புக்கான நம்­மு­டைய முயற்­சி­கள் தொடர வேண்­டும் என்­றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon