இந்தியாவில் இரு அமெரிக்க அமைச்சர்கள்

இரு நாடுகளின் வெளியுறவு, தற்காப்பு அமைச்சர்கள் பங்குபெறும் ‘2+2’ சந்திப்பிற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவும் தற்காப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பரும் இந்தியா சென்றுள்ளனர்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் இன்று நடக்கவுள்ள அந்தச் சந்திப்பில் தற்காப்பு, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றியும் இதர வட்டார, உலக விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.

இந்தியா-சீனா இடையே எல்லைப் பகுதியில் மோதல் நீடித்து வரும் வேளையில், அதுகுறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அமைச்சர்கள் இருவரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரையும் சந்திக்கவுள்ளனர்.

இருநாள் இந்தியப் பயணத்திற்குப் பின் மைக் பொம்பியோ இலங்கை, மாலத்தீவு, இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார்.

வட்­டார அள­வி­லும் உலக அள­வி­லும் இந்­தியா முக்­கிய சக்­தி­யாக வளர்ந்து வரு­வதை அமெ­ரிக்கா வர­வேற்­ப­தாக அந்­நாட்­டின் வெளி­யு­றவு அமைச்­சர் மைக் பொம்­பியோ தெரி­வித்­துள்­ளார்.

அர­சு­மு­றைப் பய­ண­மாக இந்­தி­யா­வுக்குப் புறப்­ப­டு­வ­தற்கு முன்பு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், இந்­தி­யா­வு­டன் மேலும் நெருக்­க­மாக செயல்­ப­டு­வ­தற்­கு­ரிய சாத்­தி­யக்­கூ­று­களை ஆராய இருப்­ப­தாக குறிப்­பிட்­டார்.

ஐநா பாது­காப்பு மன்­றத்­தில் அடுத்த ஆண்டு ஜன­வரி முதல் இந்­தியா செயல்­பட இருப்­பதை சுட்­டிக்­காட்­டிய அவர், இவ்­வி­ஷ­யத்­தில் இந்­தி­யா­வு­டன் இணைந்து செயல்­பட அமெ­ரிக்கா விரும்­பு­வ­தாக தெரி­வித்­தார்.

தமது இந்­திய பய­ணத்­தின் போது அமைச்­சர்­கள் மட்­டத்­தி­லான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட உள்­ளார் மைக் பொம்­பியோ.

அமெ­ரிக்க பாது­காப்­புச் செய­லர் மார்க் எஸ்­ப­ரும் இந்­தி­யா­வுக்கு வருகை தரு­கி­றார். இரு­வ­ரும் இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர், தற்­காப்­புத்­துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங் ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த உள்­ள­னர்.

மேலும், பிர­த­மர் நரேந்­திர மோடி­யை­யும் இதர அரசு மற்­றும் தொழில்­துறை பிர­மு­கர்­க­ளை­யும் சந்­திக்க உள்­ள­னர். இந்­தியா, அமெ­ரிக்கா இடை­யே­யான வியூ­கக் கூட்­ட­ணியை அடுத்­த கட்­டத்­துக்கு கொண்டு செல்­வது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­படும் என்று இந்­திய ஊட­கத் தக­வல் ஒன்று தெரி­விக்­கிறது.

சீன கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் அச்­சு­றுத்­தல்­களை முறி­ய­டிக்க சுதந்­திர நாடு­கள் எப்­படி இணைந்து பணி­யாற்ற முடி­யும் என்­பது குறித்­தும் மைக் பொம்­பியோ ஆலோ­சனை நடத்­து­வார் என­வும் அச்­செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வரும் 29ஆம் தேதி இந்­தி­யா­வில் தமது பய­ணத்தை முடித்­துக் கொண்டு, இலங்கை, மாலத்­தீ­வு­கள் மற்­றும் இந்­தோ­னீ­சியா ஆகிய நாடு­க­ளுக்­கும் அவர் பய­ணம் மேற்­கொள்ள இருக்­கி­றார்.

நட்பு நாடு­க­ளுக்குப் பய­ணம் மேற்­கொண்டு பேச்­சு­வார்த்தை நடத்­து­வது அரு­மை­யான வாய்ப்பு என பொம்­பியோ கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!