இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதி

புது­டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளு­நர் சக்தி காந்த தாஸ் கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார். இதனை தமது டுவிட்­டர் பதிவு ஒன்­றில் அவர் உறுதி செய்­துள்­ளார்.

நாடு முழு­வ­தும் கொரோனா கிரு­மித் தொற்­றால் ஏரா­ள­மான முக்­கி­யப் பிர­மு­கர்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இதில் ரிசர்வ் வங்கி ஆளு­ந­ருக்­கும் தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து தாம் நல­மாக இருப்­ப­தா­க­வும் தம்­மைத் தாமே தனி­மைப்­ப­டுத்­திக் கொண்­ட­தா­க­வும் சக்தி காந்த தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

“அண்­மைக்­கா­லங்­களில் என்னை நேரில் சந்­தித்­த­வர்­கள் கவ­ன­மாக இருக்­க­வேண்­டும். ரிசர்வ் வங்­கி­யில் பணி­கள் அனைத்­தும் வழக்­கம்­போல் நடை­பெ­றும்.

“இணை­யம், தொலை­பேசி வச­தி­கள் மூலம் அனைத்து நாட்­க­ளி­லும் நான் வங்கி அதி­கா­ரி­க­ளு­டன் தொடர்­பில் இருப்­பேன் என சக்தி காந்த தாஸ் தமது டுவிட்­டர் பதி­வில் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்கிடையே மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!