2 யானைகளுடன் எளிமையாக நடைபெற்ற தசரா விழா

2 யானைகளுடன் எளிமையாக நடைபெற்ற தசரா விழா

1 mins read
019462da-f3c6-46be-b6f3-5c3375941653
படம்: ஊடகம் -

முன் எப்­போ­தும் இல்­லாத வகை­யில் மைசூர் தசரா விழா­வில் யானை ஊர்­வ­லம் எளி­மை­யான முறை­யில் நடை­பெற்­றது.

கடந்த 17ஆம் தேதி இவ்­விழா தொடங்­கி­யது. கொரோனா விவ­கா­ரம் கார­ண­மாக இம்­முறை விழாவை ஒட்டி நடை­பெ­றும் கலை­நி­கழ்ச்­சி­கள் அனைத்­தும் ரத்து செய்­யப்­பட்­டன.

இறுதி நாளான திங்­கட்­கி­ழமை அன்று விஜ­ய­த­ச­மியை முன்­னிட்டு யானை­கள் பங்­கேற்ற ஊர்­வ­லம் நடை­பெற்­றது. இரண்டு யானை­கள் மட்­டுமே பங்­கேற்­றன. வழக்­க­மாக ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் இந்­நி­கழ்­வில் கலந்­து­கொள்­வர். இம்­முறை மிகக் குறை­வா­ன­வர்­களே பங்­கேற்றனர்.