மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் நியமனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் நியமனம்

1 mins read
044adb80-c72c-4903-8eab-9935816885b8
படம்: தமிழக ஊடகம் -

மதுரையில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை திருப்பரகுன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் ரூபாய் 1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டடம் தொடர்பான பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே மாதம் சுற்றுச்சுவர் மற்றும் சாலைகள் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவமனை துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷயன், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளின் புற்றுநோய் அறுவைசிகிச்சைப் பிரிவு மருத்துவர் சரவணன் சுப்பையா ஆகியோரும் உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்