கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் கைது

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் கைது

1 mins read
3686be48-c92d-4b1c-99bf-fc8827794d1d
படம்: ஊடகம் -

தங்­கக் கடத்­தல் வழக்­கில் இந்­தி­யா­வின் கேரள மாநில முதல்­வர் பின­ராயி விஜயனின் முன்­னாள் முதன்­மைச் செய­லா­ளர் சிவ­சங்­க­ரனை அம­லாக்­கத் துறை நேற்று கைது செய்­தது.

இவ்­வாண்டு ஜூலை 5ஆம் தேதி திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யத்­தில் ரூ.14.82 கோடி மதிப்­புள்ள 30 கிலோ தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. அங்கு உள்ள ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­க­ள் துணைத் தூத­ர­கத்­திற்கு அந்­தப் பொட்­ட­லம் வந்­த­தா­கச் சொல்­லப்­பட்­டது.

இந்த விவ­கா­ரத்­தில் முதன்­மைக் குற்­ற­வா­ளி­க­ளா­கச் சேர்க்­கப்­பட்­டுள்ள ஸ்வப்னா சுரேஷ், பி.ஆர்.சுரேஷ் ஆகி­யோ­ரு­டன் சிவ­சங்­க­ருக்கு நெருங்­கிய தொடர்­பி­ருந்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், முன்­பிணை கேட்டு சிவ­சங்­க­ரன் தாக்­கல் செய்த மனு­வைக் கேரள உயர் நீதி­மன்­றம் நேற்று நிரா­கரித்­து­விட்­டது. அதன்­பின் சில நிமி­டங்­க­ளி­லேயே, தாம் சிகிச்சை பெற்று வந்த மருத்­து­வ­ம­னை­யில் வைத்து சிவ­சங்கரன் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்