திருமணத் தடை: கோபத்தில் பக்கத்து வீட்டை இடித்தார்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆல்பின் மேத்யூ என்பவர், 30 வயதாகியும் தனக்குப் பெண் கிடைக்கவில்லை என்பதால் திருமண ஏக்கத்தில் தொடர்ந்து வரன் தேடிக்கொண்டு இருந்தார். 

தனக்கு வரன் ஏதும் சரியாக அமையாததற்கு, தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைக்காரர்தான் காரனம் என ஆல்பினுக்கு சந்தேகம் எழுந்தது.

தனது வரன்களை கடையில் உள்ள நபர்கள் கெடுப்பதாக எண்ணி காவல் துறையினரிடம் அவர் புகார் அளித்துவிட்டு திரும்பி வந்தார்.

இருந்தாலும் கோபம் அடங்காமல், புல்டோசர் வாகனத்தைக் கொண்டு வந்து பக்கத்து வீட்டை அவர் இடித்துத் தள்ளினார்.

சம்பவத்தின் தொடர்பில் ஆல்பின் கைதானதாகத் தகவல்கள் தெரிவித்தன.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!