8 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு; குணமடைவோர் 91%

1 mins read
ce7a84e3-1bfb-4951-9156-10f6d02dc1fb
படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொவிட்-19 பர­வ­லைத் தடுக்க கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வந்து நேற்­று­டன் 220 நாட்­கள் ஓடி­விட்டன.

அந்­தக் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள், நேற்­றுக் காலை நில­வ­ரப்­படி மொத்­தம் 8,040,203 பேர் என்று மத்­திய அர­சின் சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். கொவிட்-19 கார­ண­மாக 120,527 பேர் மர­ணம் அடைந்­துள்­ள­னர். 7,315,989 பேர் முற்­றி­லும் குண­ம­டைந்­து­விட்­ட­னர். நேற்­றைய நில­வ­ரப்­படி 603,587 பேர் சிகிச்சை பெற்று வந்­த­னர்.

கிருமி தொற்­றி­ய­வர்­களில் இப்­போது சிகிச்சை பெற்று வரு­வோரின் அளவு 7.5%.

மகா­ராஷ்­டிரா, ஆந்­திரா, கர்நாடகா மாநி­லங்­களில் அதிக பாதிப்­பு­கள் இன்­ன­மும் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

இந்­தி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் குண­ம­டைந்து வரும் விகி­தம் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. நேற்று அந்த விகி­தம் 90.99 விழுக்­கா­டாக இருந்­தது.

கடந்த சில நாட்­க­ளா­கவே புதி­தாக கிருமி தொற்­று­வோ­ரின் எண்­ணிக்கை நிலை­யா­கக் குறைந்து வரு­கிறது.

மரண விகி­தம் 1.49 விழுக்­கா­டாக இருக்­கிறது.

புதன்­கி­ழ­மை­யன்று புதி­தாக 49,881 பேரை கிருமி தொற்­றி­யது என்­றும் அன்று 56,480 பேர் குண­ம­டைந்­த­னர் என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.