'முகக்கவசம் அணியாதவர்கள் சாலையை சுத்தம் செய்ய வேண்டும்'

'முகக்கவசம் அணியாதவர்கள் சாலையை சுத்தம் செய்ய வேண்டும்'

1 mins read
7717fd12-7fe6-435d-8889-dbd5fcdb2bdd
படம்: இந்திய ஊடகம் -

முகக்கவசம் அணியாதவர்களுக்கு சாலையை சுத்தம் செய்ய வைக்கும் நூதன தண்டனையை வழங்கி வருகிறது மும்பை மாநகராட்சி.

இந்திய அளவில் மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிக எண்ணிக்கையிலானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், முகக்கவசம்தான் கொரோனாவைத் தடுக்கும் கவசமாகக் கருதப்படுகிறது. பொதுவாக முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்வோரிடம் ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

அந்த அபராதத்தைச் செலுத்த மறுப்பவர்கள், கொரோனா பரவல் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோரிடம் தேவையின்றி வாக்குவாதம் செய்வோர் ஆகியவர்களை சாலையைச் சுத்தம் செய்யும் பணியில் இறகுக்குவதாக மும்பை மாநகராட்சி உதவி ஆணையர் மோதே தெரிவித்தார்.

இதுவரை சுமார் 35 பேர் இந்த நூதன தண்டனையை நிறைவேற்றியதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்