சீனாவுடனான மோதல்: இந்தியா தயங்கக்கூடாது என்கிறது அமெரிக்கா

சீனாவுடனான மோதல்: இந்தியா தயங்கக்கூடாது என்கிறது அமெரிக்கா

1 mins read
b229be4d-1535-4d0d-bdaf-6c8f9c5eeec2
படம்: ஏஎஃப்பி -

தனது எல்­லையை விரி­வு­ப­டுத்த விரும்­பும் சீனா­வின் முயற்­சி­க­ளைத் தடுப்­ப­தில் இந்­தியா தயங்­கக்­கூ­டாது என அமெ­ரிக்கா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அவ்­வாறு தயங்­கு­வது சீனா­வுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களைப் பாதிக்­கும் என அண்­மை­யில் இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கரை சந்­தித்­த­போது, அமெ­ரிக்க அமைச்­சர் மைக் பொம்­பியோ வலி­யு­றுத்­தி­ய­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை புதுடெல்­லி­யில் இந்­தச் சந்­திப்பு நிகழ்ந்­தது. அப்­போது லடாக் எல்­லைப் பகு­தி­யில் ஊடு­ருவ முயற்­சிக்­கும் சீன ராணு­வத்­தின் நட­வ­டிக்­கைக்கு எதி­ராக இந்­தியா மேற்­கொள்­ளும் பதி­லடி நட­வ­டிக்­கை­க­ளுக்கு அமெ­ரிக்கா முழு­மை­யான ஆத­ரவு வழங்­கும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மே மாதம் முதல் நீடித்­து­வ­ரும் இரு­த­ரப்பு எல்­லைப் பிரச்­சினை கார­ண­மாக அமெ­ரிக்கா, இந்­தியா இடை­யே­யான இணக்­கம் அதி­க­ரித்து வரு­வ­தாக உலக அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

இந்­தி­யப் பய­ணத்­தின்­போது சீனா­வுக்கு எதி­ரான கொள்­கையை மைக் பொம்­பியோ மிக அழுத்­த­மாக வெளிப்­ப­டுத்தி உள்­ள­தா­க­வும் அவர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

இத்­த­கைய சூழ­லில் அமெ­ரிக்­கா­வின் உத­வி­யைப் பெறும் இந்­தியா, சீனா­வு­ட­னான விவ­கா­ரங்­களில் தயங்­கக்­கூ­டாது என அந்­நாடு வலி­யு­றுத்தி உள்­ளது.