புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

புது­டெல்லி: புல்­வாமா தாக்­கு­த­லில் பாகிஸ்­தா­னுக்­கும் தொடர்பு இருப்­ப­தாக அந்­நாட்­டின் அறி­வி­யல் மற்­றும் தொழில்­நுட்ப அமைச்­சர் ஃபவட் சௌத்ரி பகி­ரங்­க­மா­கத் தெரி­வித்­துள்­ளார். இது அந்­நாட்­டுக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்­தியா நீண்ட நாட்­க­ளாக கூறி­வந்­ததை பாகிஸ்­தான் இப்­போது ஒப்­புக்­கொண்­டி­ருப்­ப­தாக மத்­திய அமைச்­சர் வி.கே.சிங் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தியா தாக்­கு­தல் நடத்­தும் என்ற அச்­சத்­தின் கார­ண­மா­கவே தங்­க­ளி­டம் சிக்­கிய இந்­திய விமா­னப்­படை விமானி அபி­நந்­தனை பாகிஸ்­தான் அரசு முன்பு விடு­வித்­த­தாக பாகிஸ்­தான் முஸ்­லிம் லீக் கட்சி எம்பி அயாஸ் சாதிக் அந்­நாட்டு நாட­ளு­மன்­றத்­தில் பேசி­ய­போது குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வுக்­குள் நுழைந்து பாகிஸ்­தான் வெற்­றி­க­ர­மாக தாக்­கு­தல் நடத்தி இருப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார் அமைச்­சர் ஃபவட் சௌத்ரி.

புல்­வாமா தாக்­கு­த­லைச் சுட்­டிக்­காட்­டியே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். அத்தாக்­கு­த­லில் இந்­திய வீரர்­கள் 40 பேர் பலி­யா­கி­னர்.

“இந்­தி­யா­வுக்­குள் நுழைந்து அதன் சொந்த மண்­ணி­லேயே வெற்றி கொண்­டுள்­ளோம். இந்­தி­யா­வுக்­குள் நுழைந்து தாக்­கு­தல் நடத்­தி­யி­ருப்­பது பிர­த­மர் இம்ரான்கான் தலை­மை­யில் இந்த நாடு (பாகிஸ்­தான்) கண்­டுள்ள வெற்றி. புல்­மா­வா­வில் நமக்­குக் கிடைத்த இந்த வெற்­றி­யா­னது இம்­ரான்­கான் தலை­மைக்­குக் கிடைத்த வெற்றி,” என்­றார் அமைச்­சர் ஃபவட் சௌத்ரி.

பாகிஸ்­தான் நாடா­ளு­மன்­றத்­தி­லேயே அவர் இவ்­வாறு வெளிப்­ப­டை­யா­கப் பேசி­யி­ருப்­ப­தால் உலக அரங்­கில் அந்­நாட்­டுக்­குச் சங்­க­டம் ஏற்­பட்­டுள்­ள­தாக அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் பாகிஸ்­தா­னின் ஒப்­பு­தல் இந்­தி­யா­வுக்கு நன்மை பயக்­கும் என மத்­திய சாலை, மற்­றும் நெடுஞ்­சா­லைத் துறை இணை அமைச்­ச­ரும் இந்­திய ராணு­வத்­தின் முன்­னாள் தலை­மைத் தள­ப­தி­யு­மான வி.கே.சிங் தெரி­வித்­துள்­ளார்.

“பாகிஸ்­தா­னின் வெளிப்­ப­டை­யான அறி­விப்பை இந்­திய அரசு நல்ல வாய்ப்­பா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்­ளும் என நம்­பு­கி­றேன். பாகிஸ்­தா­னின் இந்­தச் செயல்­பாடு குறித்து உலக நாடு­க­ளுக்கு எடுத்­துச் சொல்ல முடி­யும். மேலும், பாகிஸ்­தானை கறுப்­புப் பட்­டி­ய­லில் சேர்க்க இந்­தியா வலி­யு­றுத்த வேண்­டும்,” என­வும் அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வுக்கு எதி­ரான தீவி­ர­வாத செயல்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த பாகிஸ்­தான் தவ­றி­விட்­ட­தாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் அனு­ராக் ஸ்ரீவஸ்­தவா சாடி­யுள்­ளார்.

“பாகிஸ்­தான் குறித்த உண்மை ஒட்­டு­மொத்த உல­கத்­துக்­கும் தெரி­யும். அந்­நாடு தீவி­ர­வா­தத்­துக்கு ஆத­ர­வாக உள்­ளது. எவ்­வ­ளவு முறை மறுத்­தா­லும் இந்த உண்­மையை மறைக்க இய­லாது.

“தீவி­ர­வா­தத்­து­ட­னான தங்­க­ளது தொடர்பு குறித்து அந்­நாட்­டுத் தலை­வர்­களே பல­முறை பேசி­யுள்­ள­னர். ஐ.நா. மன்­றத்­தால் பயங்­க­ர­வா­தி­கள் என அறி­விக்­கப்­பட்­டுள்­ள­வர்­களில் பெரும்­பா­லா­னோ­ருக்கு பாகிஸ்­தான் அடைக்­க­லம் கொடுத்­துள்­ளது. எனவே, தீவி­ர­வா­தத்­தால் தாங்­கள் பாதிக்­கப்­பட்­ட­தாக சித்­தி­ரிக்க அந்­நாடு முயற்­சிக்­கக்­கூ­டாது,” என்று அனு­ராக் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!