திருவனந்தபுரம்: போதைப்பொருள் விற்பனையாளருடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கேரள முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பீநேஷ் மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கன்னடத் திரையுலகில் போதைப்பொருள் பரவலாக பயன்படுத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் நடிகைகள் ராகினி, அனிகா, சஞ்சனா கல்ரானி உள்ளிட்டோர் கைதாகி உள்ளனர்.
இந்நிலையில் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பீநேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை நான்கு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

