ஆட்சித் திறனில் நாட்டில் இரண்டாம் இடத்தில் தமிழகம்

ஆட்சித் திறனில் நாட்டில் இரண்டாம் இடத்தில் தமிழகம்

1 mins read
e3427280-65b1-45ce-bc8a-37266de5830d
படம்: ஊடகம் -

இந்திய நாட்டில் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் ஆய்வு அமைப்பு ஒன்று வெளியிட்டு வருகிறது.

'பொது நிர்வாகம், ஆட்சித் திறன் ஆகிய அம்சங்களை உள் ளடக்கிய பொது விவகாரங்களுக்கான மையம்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் வழி, நாட்டின் சிறந்த நிர்வாகத் திறனுள்ள மாநிலமாக கேரளா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் வந்துள்ளது.

சிறந்த நிர்வாகத் திறன் தொடர்பான தரவரிசையில் தென் மாநிலங்கள் முதன்மை நிலையிலும் வடமாநிலங்கள் பின்தங்கியும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநிலங்களின் நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் அதன் நிர்வாகத் திறனை அளவிட்டு இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 2020ஆம் ஆண்டுக்கான ஆய்வுப் பட்டியலில், சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் நான்கு தென்மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன.

பெரிய மாநிலங்கள் பிரிவில் கேரளா (1.388 புள்ளி), தமிழ்நாடு (912), ஆந்திரப்பிரதேசம் (531), கர்நாடகா (468) புள்ளிகள் பெற்று முதல் நான்கு இடங்களில் உள்ளன.

உத்தரப்பிரதேசம், ஒடிசா, பீகார் மாநிலங்கள் தரவரிசைப் பட்டியலின் கடைசியில் இடம்பெற்றுள்ளன. சிறிய மாநிலங்கள் பிரிவில், கோவா முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் மேகாலயா, இமாச்சலப்பிரதேச மாநிலங்கள் உள்ளன.

எதிர்மறை புள்ளிகளுடன் மிகவும் பின்தங்கிய நிலையில் மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களும் டெல்லி நகரமும் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்