டிரம்ப் வெல்வார் என பிரபல சோதிடர் கணிப்பு

1 mins read
07f9fe2c-56ba-4856-993f-62764fd9550d
படம்: ஊடகம் -

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சோதிடர் டாக்டர் சங்கர் சரண் திரிபாதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஜாதகத்தை ஆய்வு செய்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறக்கூடிய சமயத்தில் எல்லா கிரகங்களும் டிரம்ப்புக்கு சாதகமாக இருப்பதாகவும் 9 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று டிரம்ப் வாகைசூடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றாலும் அவர் வாக்குகளில் மோசடி செய்துதான் வெற்றிபெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் என்றும் ஜோதிடர் திரிபாதி தெரிவித்துள்ளார்.

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் சோதிட ஆலோசகராக இருந்த சங்கர் சரண் திரிபாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பாஜக செய்தித் தொடர்பாளரான அவாதுத் வாக் என்பவரும் டிரம்ப்பின் ஜாதகத்தை ஆராய்ந்த பின்னர் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் ஆவார் என்று தமது டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்புச் சொற்கள்