புதுடெல்லி: இந்திய - சீன உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி உரைநிகழ்த்திய அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 30 ஆண்டுகளாக சீனாவுடன் நட்புறவு நீடித்து வந்ததையும், எல்லையில் வெளிப்படைத்தன்மையுடன் இருதரப்பிலும் நடந்துகொண்டதால் அமைதி நீடித்து வந்ததையும் சுட்டிக்காட்டினார்.
அசல் எல்லைக்கோட்டுப் பகுதியை மாற்றியமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை சீனா மதித்துநடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். படைகள் முன்பு எந்தெந்த நிலைப்பாடுகளில் குவிக்கப்பட்டனவே அங்கேதான் இருக்க வேண்டும் என்று ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்திய - சீன எல்லைப்பகுதியில் பதற்றம் தணிந்து இரு நாடுகளும் இயல்புநிலைக்குத் திரும்பவேண்டும். அதற்கு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஒப்பந்தங்களை சீனா முழுமையாக மதிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று தெரிவித்தார்.
சர்தார் வல்லபாய் பட்டேலை நினைவுகூரும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் உரையாற்றினார். அப்போது, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயுள்ள எல்லைக்கோட்டை தன்னிச்சையாக மாற்றும் நடவடிக்கையை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கூறியுள்ளார்.
'இந்தியாவும் கொவிட் நோய்த்தொற்றுக்குப் பிந்திய உலகமும்' என்ற தலைப்பில் உரையாற்றிய அமைச்சர், "இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள 30 ஆண்டுகால நல்லுறவு, கொரோனா நோய்த்தொற்றுக்குப் பின்னர் கரைபடிந்துள்ளதாகக் கூறினார். அத்துடன் இந்த இரு பெரிய நாடுகளும் தங்கள் எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவ வேண்டுமெனில் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை தொடர்பான ஒப்பந்தத்தை சீனா முழுமையாக மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

