இந்திய ராணுவத் தளபதிக்கு கௌரவ பதவி

இந்திய ராணுவத் தளபதிக்கு கௌரவ பதவி

1 mins read
745696c5-12a3-4700-8892-67c796f8763a
இந்திய ராணுவத்தளபதி நரவானேவுக்குவீர வாளைவழங்கியநேப்பாள அதிபர் பித்யா தேவிபண்டாரி. -

நேப்பா­ளத்­தில் இந்­திய ராணு­வத் தள­பதி கௌர­விக்­கப் பட்­டுள்­ளார். அவ­ருக்கு நேப்­பாள நாட்­டின் உய­ரிய பதவி வழங்­கப் பட்­டுள்ளது.

நேபாள ராணுவ தள­ப­தி­யின் அழைப்பை ஏற்று இந்திய ராணு­வத் தலைமை தள­பதி மனோஜ் முகுந்த் நர­வானே மூன்று நாள் அரசு முறைப் பய­ணம் மேற்­கொண்டு புதன்­கி­ழமை அன்று நேபா­ளம் வந்து சேர்­தார்.

தலை­ந­கர் காத்­மாண்­டு­வில் தனி விமா­னத்­தி­லி­ருந்து இறங்­கிய நர­வா­னேவுக்கு சிறப்­பான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து நேபாள நாட்டு ராணு­வத் தலைமை தள­பதி பூர்ண சந்­திர தாப்­பாவை அவர் சந்­தித்­துப் பேசி­னார். இந்­தச் சந்­திப்­பில் இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான நட்பு மற்­றும் ஒத்­து­ழைப்பை வலு­ப­டுத்­து­ம் வழிகள் குறித்து இரு­வ­ரும் ஆலோ­சித்­த­னர்.

பின்னர் நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரியை ராணுவத் தளபதி நரவானே சந்தித்துப் பேசினார்.

அப்போது நேபாள ராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவியை நரவானேவுக்கு அதிபர் பித்யா தேவி வழங்கி கௌரவித்தார்.

அதற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் வீரவாள் அவருக்கு வழங்கப்பட்டன.

இந்த விழாவில் நேபாள பிரதமர் ஒலி, இந்திய தூதர் வினய் குவாத்ரா மற்றும் இரு நாட்டின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.