அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரு ஜோ பைடனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். அத்துடன், திருவாட்டி கமலா ஹாரிஸ் துணைப்பிரதமராக இருப்பது "அவரது சித்திகளுக்கு மட்டுமின்றி" இந்திய அமெரிக்கர்கள் அனைவருக்கும் பெருமை தருவதாக தெரிவித்திருக்கிறார்.
"ஜோ பைடனின் வெற்றிக்கு என் வாழ்த்துகள்! நீங்கள் துணையதிபராக இருந்தபோது இந்திய-சீன உறவுகள் வலிமையாவதற்கு நீங்கள் அளித்துள்ள பங்களிப்பு இன்றியமையாதது. இந்திய-அமெரிக்க உறவை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்காக உங்களுடன் மீண்டும் பணியாற்ற நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்," என்று திரு மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்தியாவுடனான உறவை ஆதரிக்கும் முக்கிய தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்த திரு பைடன், இந்திய அமெரிக்க குடியியல் அணுத் தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் முக்கிய ஆதரவாளராக உள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு இந்திய அரசியல் தலைவர்களும் திருவாட்டி ஹாரிசுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த திரு ராகுல் காந்தியும் அக்கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தியும் திரு பைடனுக்குத் தமது வாழ்த்துகளை வெளிப்படுத்தினர்.

