புகை மண்டலமாக காட்சியளிக்கும் புதுடெல்லி

புகை மண்டலமாக காட்சியளிக்கும் புதுடெல்லி

2 mins read
e1fb98b9-c797-442a-983e-5a5c1385ff76
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் கடுமையான பனிப்புகை சூழ்ந்திருக்கும் பகுதியில் நேற்று வாகனமோட்டிகள் சென்றனர். படம்: இபிஏ -

இந்­தி­யத் தலை­ந­கர் புது­டெல்­லி­யில் கடு­மை­யான பனிப்­பொ­ழிவு மற்­றும் காற்று மாசடைவதால் அந்நக­ரம் முழு­வதும் புகை மண்­ட­ல­மாக காட்­சி­ய­ளித்­தது. பல ஆண்டுகளில் காணாத பனிப்புகையால் ஏற்படும் சுவாசப் பிரச்சினைகளை அந்நகர மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்­பாக, கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு மேலும் பல உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் ஏற்­படும் அபா­யத்­தைப் பனிப்­புகை தரு­கிறது.

புது­டெல்­லி­யில் ஒவ்­வோர் ஆண்­டும் குளிர்­கா­லத்­தில் காற்­றின் தரம் பாதிக்­கப்­ப­டு­கிறது. அது­மட்­டு­மல்லாமல் அண்டை மாநி­லங்­களில் விவ­சாய நிலங்­களில் பயிர் கழி­வு­கள் எரிக்கப்­ப­டு­வ­தா­லும் காற்­றின் தரம் பாதிக்­கப்­ப­டு­கிறது.

புது­டெல்லி மற்­றும் அதன் சுற்­றுப்­பு­றப் பகு­தி­களில் காற்று மாசைக் குறைக்க இந்­திய அரசு அவ­சரச் சட்­டத்தை கொண்டு வந்­தது. ஆனா­லும், அங்கு காற்று மாசு இன்­ன­மும் குறைந்­த­பாடில்லை. புது­டெல்­லி­யில் கொரோனா கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்து வரும் சூழ­லில், குளிர்­கா­லப் பரு­வத்­தின் தொடக்­கத்­தி­லேயே காற்று மிக­வும் மாசு­பட்­டுள்­ள­தால் புது­டெல்லி மக்­கள் மிகுந்த கவலை அடைந்­துள்­ள­னர்.

கடும் பனிப்­பொ­ழிவு மற்­றும் காற்று மாசடைவதால், புது­டெல்லி நக­ரமே புகைப்­ப­ட­ல­மாக காட்­சி­ அளிக்­கிறது. நேற்று காலை புது­டெல்­லி­யின் ஆனந்த் விகார் பகு­தி­யில் காற்று தரக்­கு­றி­யீடு 484 புள்­ளி­க­ளா­க­வும் ஐ.டி.ஓ. பகு­தி­யில் 472 புள்­ளி­க­ளா­க­வும் பதி­வா­னது. அப்­ப­கு­தி­கள் முழு­வ­தும் புகை மண்­ட­ல­மாக காட்­சி­ய­ளித்­த­தால், வாக­ன­மோட்­டி­கள் கடும் சிர­மத்­திற்கு உள்­ளா­கி­னர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை

இதற்­கி­டையே, தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், காற்று மாசு­ அதிகம் உள்ள நக­ரங்­களில் பட்­டாசு வெடிக்க தடை விதிக்­கப்­படு­வதாகத் தேசிய பசுமை தீர்ப்­பா­யம் தெரி­வித்­துள்­ளது. காற்று மாசு உயர்­வால் கொரோனா பாதிப்பு அதி­க­மா­கும் என­வும் பட்­டாசு வெடிக்க தடை விதிக்க வேண்­டும் என­வும் தேசிய பசுமை தீர்ப்­பா­யத்­தில் முறை­யி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலை­யில், நாடு முழு­வதும் காற்று மாசு அதி­க­மாக உள்ள மாந­க­ரங்­களில் பட்­டாசு வெடிக்­கத் தடை விதிப்­ப­தாக தேசிய பசுமை தீர்ப்­பா­யம் தெரி­வித்­துள்­ளது.

நேற்று நள்ளிரவு முதல் இம்மாதம் 30ஆம் தேதி வரை தடையை அமல்­ப­டுத்த வேண்­டும் என்று தேசிய பசுமை தீர்ப்­பா­யம் கூறி­யது. இந்த உத்­த­ரவை அனைத்து மாநில தலை­மைச் செய­லா­ளர்­களுக்­கும் அனுப்பி தீவி­ர­மாக செயல்­படுத்த வேண்­டும் என­வும் தீர்ப்­பாயம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.