கொரோனா: எதிர்ப்பு சக்தியை கூட்டிய பழக்கவழக்கங்கள்

கொரோனா: எதிர்ப்பு சக்தியை கூட்டிய பழக்கவழக்கங்கள்

2 mins read
816caa75-4150-4e4f-8527-a11b0b520417
அரசின் அறிவுறுத்தல்களையும் மீறி அகமதாபாத்தில் உள்ள கடைத்தெருவில் திரளாகக் கூடியுள்ள பொதுமக்கள். படம்: ஏஎஃப்பி -

சுகா­தா­ர­மற்ற வாழ்க்கை முறையே இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித் தொற்­றுப்­ப­ர­வல் குறை­வாக இருப்­ப­தற்கு கார­ணம் என அண்­மைய ஆய்­வு முடி­வு­கள் தெரி­விக்­கின்­றன.

பல்­வேறு உலக நாடு­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லும் அதன் பாதிப்­பும் குறை­வாக இருப்­ப­தாக நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

கடந்த செப்­டம்­ப­ரில் கொரோனா முதல் அலை­யின் தாக்­கம் உச்­சத்­தைத் தொட்­டது. பின்­னர் பாதிப்பு படிப்­ப­டி­யா­கக் குறைந்­து­வ­ரும் நிலை­யில் இறப்­போர் விகி­த­மும் குறைந்­துள்­ளது.

உல­கி­லேயே இரண்­டா­வது அதிக மக்­கள்தொகை கொண்ட ஒரு நாட்­டில் கொரோ­னா­வின் தாக்­கம் குறை­வாக இருப்­பது மற்ற நாடு­களை ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது.

இந்­நி­லை­யில் இந்­தி­யா­வில் கொரோ­னா­வின் தாக்­கம் குறித்து அண்­மை­யில் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. இதில் சுவா­ர­சி­ய­மான தக­வல்­கள் கிடைத்­துள்­ளன.

"பெரும்­பா­லான இந்­தி­யர்­கள் சுகா­தா­ர­மற்ற வாழ்க்கை முறை­யைப் பின்­பற்­று­கின்­ற­னர். நீண்ட கால­மாக சுத்­த­மின்றி இருப்­ப­தும், சுகா­தா­ர­மற்ற பழக்க வழக்­கங்­களைக் கொண்­டி­ருப்­ப­தும் பெரும்­பா­லான இந்­தி­யக் குடி­மக்­க­ளி­டம் காணப்­படும் அம்­சங்­கள். இத­னால் இந்­தி­யக் குடி­மக்­க­ளி­டம் நோய் எதிர்ப்­பு சக்தி என்­பது இயல்­பா­கவே அதி­க­மாக உள்­ளது," என்று அண்­மைய ஆய்வு முடி­வு­கள் தெரி­விக்­கின்­றன.

எனி­னும் இந்­தி­யா­வில் தொற்­றுப் பர­வல் குறைய இது­மட்­டுமே கார­ணம் என்று ஒரு­த­ரப்­பு கூறு­வதை ஆய்­வா­ளர்­கள் மறுத்­துள்­ள­னர். அதே­ச­ம­யம் அதி­கப்­ப­டி­யான நுண்­ணு­யி­ரி­களை ஒரு­வர் வெளிப்­படுத்­து­வது நோய் தொற்­று­வ­தைத் தடுக்க உத­வு­கிறது என்­கி­றார்­கள்.

"அர­சின் வழி­காட்­டி நெறி­முறை­களை இந்­திய மக்­கள் முறை­யா­கக் கடைப்­பி­டிப்­பதே தொற்­றுப் பர­வல் குறைய கார­ணம் என்று கூறு­வது தவறு. மக்­க­ளின் சுகா­தா­ர­மற்ற வாழ்க்கைமுறை­யும் சுத்­தத்­தைக் கடைப்­பி­டிக்­கா­த­தும் தொற்­றுப் பர­வ­லைக் குறைத்­துள்­ளது. அதற்­காக சுகா­தா­ர­மற்ற பழக்கவழக்­கங்­களை கடைப்­பிடிக்­கத் தேவை­யில்லை," என்­றும் ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் 835,000 மாதி­ரி­கள் நோய்த்­தொற்­றைக் கண்­ட­றி­வ­தற்­காக பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன. இது­வரை 110 மில்­லி­யன் மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 8.6 மில்­லி­ய­னைக் கடந்­துள்­ளது என்­றும் சுமார் 8 மில்­லி­யன் பேர் கொரோனா கிரு­மித் தொற்­றின் பிடி­யி­லி­ருந்து மீண்­டுள்­ள­னர் என்­றும் மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மேலும், உயி­ரி­ழப்பு 1.48 விழுக்­கா­டா­க­வும் குண­ம­டை­வோர் விகி­தம் 92.56 விழுக்­கா­டா­க­வும் உள்­ளது.

இந்தியாவில் கொரோனா கிருமியின் தாக்கம் குறித்து நடைபெற்ற ஆய்வில் தகவல்