கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க புதுச்சட்டம்: ஐந்து மாநிலங்கள் திட்டம்

2 mins read
6bac0641-a4c1-4847-9f15-aae427bc13d4
படம்: ஊடகம் -

திரு­ம­ணத்­துக்­கா­கப் பெண்­கள் கட்­டாய மத­மாற்­றம் செய்­யப்­ப­டு­வ­தற்கு எதி­ராக புதுச் சட்­டம் கொண்டு வரு­வது குறித்து பரி­சீ­லிக்­கப்­படும் என ஐந்து மாநிலங்­கள் தெரி­வித்­துள்­ளன.

நாடு முழு­வ­தும் பல முஸ்­லிம் ஆட­வர்­கள் பெண்­க­ளைத் திட்­ட­மிட்டு மத­மாற்­றம் செய்­யும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­தாக ஒரு குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.

'லவ் ஜிகாத்' என்ற பெய­ரில் நடை­பெ­றும் இத்­த­கைய மத­மாற்­றத்­தைத் தடுத்து நிறுத்த உத்­த­ரப்­பி­ர­தேச அரசு உரிய நட­வ­டிக்கை எடுக்­கும் என அதன் முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் தெரி­வித்­துள்­ளார்.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­ப­வர்­கள் தங்­களைத் திருத்திக் கொள்­ளா­விட்­டால் அவர்­க­ளின் இறுதி யாத்­திரை விரை­வில் தொடங்­கும் என அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

கடந்த பல ஆண்­டு­க­ளாக 'லவ் ஜிகாத்' எனப்­படும் கட்­டாய மத­மாற்ற நட­வ­டிக்­கைக்கு எதி­ராக குரல் கொடுத்து வரு­கி­றார் முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத். இந்­நிலை­யில் பாஜக ஆளும் பிற மாநி­லங்­க­ளின் முதல்­வர்­களும் லவ் ஜிகாத்தை எதிர்த்­துள்­ள­னர்.

உத்­த­ரப்­ பி­ர­தே­சத்­தைப் பின்­பற்றி சில நட­வ­டிக்­கை­களை எடுக்க இருப்­ப­தாக ஹரி­யானா முதல்­வர் அறி­வித்­துள்­ளார். இதை­ய­டுத்து லவ் ஜிகாத்­தைத் தடுக்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என மத்­தி­­யப்­பி­ர­தேச முதல்­வ­ரும் தெரி­வித்­துள்­ளார்.

திரு­ம­ணத்­துக்­காக கட்­டாய மத­மாற்­றம் செய்­யப்­ப­டு­வ­தைத் தடுக்க சட்­டம் கொண்­டு­வ­ரப்­படும் என கர்­நா­டக சுற்­று­லாத் துறை அமைச்­சர் அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஹரி­யா­னா­வில் கடந்த அக்­டோ­பர் மாதம் 20 வயதே ஆன இளம் இந்­துப்­பெண் பட்­டப் பக­லில் பொது இடத்­தில் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார். அவ­ரைக் கொன்­றது ஒரு முஸ்­லிம் இளை­ஞர் என்­பது தெரி­ய­வந்­தது. இச்­சம்­ப­வத்­துக்கு 'லவ் ஜிகாத்'தான் கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் கர்­நா­டகா, கேரளா, உத்­த­ரப்­பி­ர­தேச காவல்­து­றை­யி­னர் மேற்­கொண்ட விசா­ர­ணை­யின்­போது அம்­மா­நி­லங்­களில் மதம் மாறி திரு­ம­ணம் செய்­து­கொண்ட இந்­துப் பெண்­களை யாரும் மத­மாற்­றத்­துக்­குக் கட்­டா­யப்­ப­டுத்­த­வில்லை எனத் தெரி­ய­வந்­த­தாக முன்­னர் அறி­வித்­தன. எனி­னும் சில மாநில அர­சு­கள் இந்த விவ­கா­ரம் தொடர்­பாக தொடர்ந்து விசா­ரணை நடத்த உத்­த­ர­விட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில் இந்­தி­யா­வில் மதம் மாறித் திரு­ம­ணம் செய்து கொண்­ட­வர்­கள் குறித்த துல்­லி­ய­மான எண்­ணிக்கை தெரி­ய­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு கேர­ளா­வைச் சேர்ந்த இளம் இந்­துப்­பெண் முஸ்­லிம் மதத்­துக்கு மாறி தன் காத­லரை மணந்­தார். இதற்கு 'லவ் ஜிகாத்'தான் கார­ணம் என்று பெண்­ணின் பெற்­றோர் குற்­றம் சாட்­டி­னர்.

இது­தொ­டர்­பாக உச்­ச­ நீ­தி­மன்­றத்­தில் வழக்­கும் நடந்­தது. அப்­போது தாம் விருப்­பப்­பட்டு மதம் மாறி­ய­தாக இளம்­பெண் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார். அத்­தி­ரு­ம­ணம் செல்லும் என அறி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து கேர­ளா­வில் நடந்த 11 மத­மாற்­றத் திரு­ம­ணங்­கள் குறித்து விசா­ரிக்க உச்­ச­ நீ­தி­மன்­றம் தேசி­ய புல­னாய்வு முக­மைக்கு உத்­த­ர­விட்­டது. விசா­ர­ணைக்­குப் பின்­னர் எந்­தப் பெண்­ணும் கட்­டா­ய­மாக மதம் மாற்­றப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வில்லை என அந்த முகமை தெரி­வித்­தது.