ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமைச் செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமி தனிமை முகாமில் தடுத்து வைக்கப்பட்டபோது விதிமுறையை மீறி கைபேசியைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் தாலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார்.
கட்டட உள்அலங்கார வடிவமைப்பாளர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பான வழக்கில் அர்னாப் கைதாகியுள்ளார். பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அலிபாக் பகுதியில் தற்காலிக சிறையாக மாற்றப்பட்டுள்ள பள்ளி ஒன்றில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் தனிமை முகாமில் அவர் கைபேசியைப் பயன்படுத்தியதாக போலிசார் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடப்பதாகவும் அலிபாக் காவல்துறை தெரிவித்தது. இதற்கிடையே அர்னாப்பின் பிணை மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

