பிரதமர் மோடியின் தீபாவளிச் செய்தி; உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குங்கள்

பிரதமர் மோடியின் தீபாவளிச் செய்தி; உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குங்கள்

1 mins read
7dbb9ae2-afca-4723-9e37-41954c89bb3e
படம்: ஊடகம் -

பிர­த­மர் மோடி வெளியிட்ட தமது தீபா­வ­ளிச் செய்­தி­யில் உள்­ளூர் வியா­பா­ரி­கள் தயா­ரித்த பொருட்­களை வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதன் வாயி­லாக பொரு­ளி­யல் வளர்ச்சி அடை­யும் என்றார் அவர்.

உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் தமது சொந்தத் தொகு­தி­யான வார­ணா­சி­யில் திங்­கட்­கி­ழ­மை­யன்று ரூ. 614 கோடி மதிப்­புள்ள மக்­கள் நலத் திட்­டங்­களை அவர் தொடங்கி வைத்­தார்.

அப்­போது பேசிய பிர­த­மர் மோடி, உள்­ளூர் வியா­பா­ரி­கள் தயா­ரித்த பொருட்­களை வாங்கி அவர்­களை ஊக்­கப்­ப­டுத்த வேண்டும் என்று கேட்­டுக்கொண்­டார்.

"உள்­ளூர் வியா­பா­ரி­க­ளி­ட­ம்­இருந்து வெறும் அகல் விளக்­கு களை மட்­டும் வாங்­கு­வ­தோடு நிறுத்தி ­விடக்கூடாது.

"தீபா­வ­ளிக்­காக நீங்­கள் வாங்­கும் அனைத்துப் பொருட்­க­ளை­யும் உள்­ளூர் வியா­பா­ரி­க­ளி­டம் இருந்து வாங்க வேண்­டும். இது இந்­தி­யப் பொரு­ளி­யலை மேலும் வலுப்­ப­டுத்த பேரு­த­வி­யாக இருக்­கும். வார­ணாசி மக்­க­ளுக்கு மட்­டு­மின்றி நாட்டு மக்­கள் அனை­வ­ருக்­கும் இந்தக் கோரிக்­கையை விடுக்­கி­றேன்," என்று திரு மோடி குறிப்­பிட்­டார்.

மேலும் பேசிய அவர், "'ஸ்வ­மித்வா' திட்­டத்­தின் கீழ் விவ­சா­யி­க­ளுக்கு சொத்து அட்டை வழங்­கப்­படும் என்றார்.

"வங்­கிக்­க­டன் பெறு­வ­தற்கு மட்டுமின்றி விவ­சாய நிலங்­கள் அப­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்கும் முற்­றுப்­புள்ளி வைக்­க ­இந்­தத் திட்­டம் உத­வும். வேளாண் சீர்­தி­ருத்தச் சட்­டங்­கள் வாயி­லாக விவ­சா­யி­கள் தங்­கள் விளை­பொ­ருட்­களை நேர­டி­யாக சந்­தை­யில் விற்­பனை செய்ய வழி கிடைத்­துள்­ளது. இதனால் இடைத் ­த­ர­கர்­கள் நடை­முறை ஒழிக்­கப்­பட்டு­ள்­ளது," என்றும் திரு மோடி தெரிவித்தார்.