இறுதிவரை பரபரப்பான சூழலில் நிகழ்ந்த பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாஜக கூட்டணியின் வெற்றியுடன் முடிந்தது.
மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் பாஜக கூட்டணிக்கு 125 இடங்கள் கிடைத்ததன் மூலம் பீகார் மாநிலத்தை இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி தக்கவைத்துக் ெகாண்டுள்ளது.
இந்தக் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் புதல்வர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான, காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய, மாபெரும் கூட்டணி 110 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.
கொவிட்-19 கொள்ளைநோய் 8.5 மில்லியன் மக்களை பாதித்தது ஒரு புறம், இந்தியா இதுவரை கண்டிராத பொருளியல் வீழ்ச்சி இன்னொரு புறம் என இந்தியா பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் மோடியின் பாஜக கூட்டணிக்கு இந்தத் தேர்தல் பெரும் சவாலாக அமைந்தது.
பீகார் மாநில மக்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்த மோடி, இது ஜனநாயகத்துக்கு கிடைத்த ெவற்றி என டுவிட்டரில் பதிவிட்டார்.
இந்தியாவின் மிக ஏழ்மையான மாநிலமான பீகாரில் எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை உள்ளது. இந்திய நாடாளுமன்றத்துக்கு 40 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் இந்த மாநிலத்துக்கு பெரும் அரசியல் முக்கியத்துவம் உள்ளது கண்கூடு.
கடந்த ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்ற பிறகு நடைபெற்ற பல மாநிலத் தேர்தல்களில் அக்கட்சி சறுக்கியுள்ளது.
மகாராஷ்டிர தேர்தல் முடிவில் அங்கு கூட்டணிக் கட்சியான சிவசேனையுடன் ஏற்பட்ட தகராறில் கூட்டணி முறிந்து அது ஆட்சியைப் பறிகொடுத்தது. ராஜஸ்தான், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலும் பாஜக ஆட்சிைய இழந்தது.
இந்நிலையில், பீகாரில் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளர்களில் பலர் தோல்வியடைந்து அதிகப்படியான பாஜக வேட்பாளர்கள் வென்றுள்ள நிைலயில் பீகாரில் இதுநாள் வரை இருந்த நிலைமை மாறி அங்கு ஆளும் கூட்டணியில் பாஜகவின் கை ஓங்கியுள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், தேர்தலில் 75 இடங்களை வென்றுள்ள தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் பீகார் சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.
திரு தேஜஸ்பி யாதவின் தேர்தல் கூட்டங்களுக்கு பெரும் திரளான மக்கள் கூடிய நிலையில் பீகாரில் அரசியல் மாற்றம் நிகழக்கூடும் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், பீகாரில் 1990ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த முன்னாள் முதல்வர்களும் தேஜஸ்வி யாதவின் தந்தை, தாயுமான லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோரின் ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி பாஜக கூட்டணிக்கு கைகொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றியை தமிழகம் கவனிக்க வேண்டும் என கவனிப் பாளர்கள் கூறுகின்றனர். ஐக்கிய ஜனதா தளத்துடன் சிறிய பங்காளிக் கட்சியாக இணைந்த பாஜக இன்று அக்கட்சியைவிட அதிக இடங்களைக் கைப்பற்றும் அளவுக்கு சூழலை தனக்கு சாதகமாக மாற்றியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் கருத்து ரைத்துள்ளனர்.

