மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், "கொரோனா கிருமிப் பரவலுக்கு எதிரான போரின் மத்தியில் ஒரு மகத்தான சாதனையாக 106 நாட்களுக்குப் பிறகு முதல்முறையாக சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தைவிடக் குறைந்து உள்ளது. தொற்று பாதிப்புடன் 4 லட்சத்து 94 ஆயிரத்து 657 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
"ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குப் பிறகு முதல் தடவையாக சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது," என கூறி உள்ளது.
பல நாடுகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சகம் தனது டுவிட்டரில், "இந்த மைல்கல் சாதனை மத்திய அரசின் நீடித்த, தரப்படுத்தப்பட்ட, இலக்கு வைக்கப்பட்ட உத்தி ஆகும். மேலும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் திறமையான செயல்பாடுகள், மருத்துவர்கள் மற்றும் பிற எல்லா கொரோனா வீரர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் சாத்தியமானது," என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்றுக் காலை நிலவரப்படி மொத்தம் 86,35,754 பேருக்கு கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களில் 80,11,844 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 1,27,615 பேர் உயிரிழந்த னர். கேரளாவில் நேற்று முன்தினம் 6010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 28 பேர் ஒரேநாளில் மாண்டனர்.

