கர்நாடக மாநில ஐபிஎஸ் அதிகாரியும் உள்துறை செயலாளருமான ரூபா, போக்குவரத்து போலிசார் சாலையில் கடமையில் ஈடுபட்டு இருக்கும்போது உயர் போலிஸ் அதிகாரிகள் வந்தால் இனி அவர்களுக் காக 'சல்யூட்' அடிக்கத் தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
"போக்கு வரத்து காவலர்கள் சிலர் உயர் அதிகாரிகள் சாலைகளில் வருகிறார்கள் என்றால் பதற்றம் அடைந்துவிடுகின்ற னர்.
"அவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டுமென்ற கவனத்தில் போக்குவரத்து நெரிசல்களை சீர்செய்ய காவலர்கள் தவறிவிடுகின்ற னர்," என அவர் கூறியுள்ளார்.

