இந்தியா: முதன்முறையாக பொருளியல் மந்தநிலை

2 mins read
d0fb3614-45e8-4af5-98d6-551ca524ab34
படம்: ராய்ட்டர்ஸ் -

வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக இந்­தியா பொரு­ளி­யல் மந்­த­நி­லையை எதிர்­கொண்­டுள்­ளது.

2020-21 நிதி­யாண்­டின் ஏப்­ரல் முதல் ஜூன் வரை­யி­லான முத­லாம் காலாண்­டில் இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி (ஜிடிபி) 23.9% வீழ்ச்சி கண்­டது.

இந்­நி­லை­யில், ஜூலை முதல் செப்­டம்­பர் வரை­யி­லான இரண்­டாம் காலாண்­டி­லும் ஜிடிபி 8.6% சரி­வைச் சந்­தித்­துள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்று இந்­தி­யா­வின் மத்­திய வங்கி முதன்­மு­றை­யாக வெளி­யிட்ட 'நவ்­காஸ்ட்' ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­வித்­து உள்ளது.

மத்­திய வங்­கி­யின் துணை ஆளு­நர் மைக்­கல் பத்ரா உள்­ளிட்ட பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் குழு இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்களை மதிப்­பிட்டு இருக்­கிறது.

"வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக, இந்த நிதி­யாண்­டின் முற்­பா­தி­யில் இந்­தியா 'டெக்­னிக்­கல் ரிசெ­ஷன்' எனப்­படும் பொரு­ளி­யல் மந்­த­நிலைக்­குள் நுழைந்­தி­ருக்­கிறது," எந்த அவ்­வி­த­ழின் ஆசி­ரி­யர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

தொடர்ந்து இரு காலாண்­டு­களாக மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யின் வளர்ச்சி எதிர்­மறை விகி­தத்­தில் இருந்­தால் பொரு­ளி­யல் மந்­த­நி­லையை எட்­டி­விட்­டது எனப் பொருள்.

இம்­மா­தம் 27ஆம் தேதி அதி­கா­ர­பூர்வ புள்­ளி­வி­வ­ரங்­களை இந்­திய அரசு வெளி­யி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

விற்­பனை குறைந்­த­போ­தும் செல­வி­னங்­க­ளைக் குறைத்­த­தால் இரண்­டா­வது நிதி­யாண்­டில் நிறு­வனங்­கள் லாபம் ஈட்­டின. இந்த ஏற்­றம் நீடித்­தால், அக்­டோ­பர் முதல் டிசம்­பர் வரை­யி­லான மூன்­றாம் காலாண்­டில் இந்­தி­யப் பொரு­ளி­யல் வளர்ச்­சிப் பாதைக்­குத் திரும்­ப­லாம் எனச் சொல்­லப்­ப­டு­கிறது.

ஆயி­னும், "உலக நாடு­கள் கொரோனா பாதிப்­பின் இரண்­டா­வது தாக்­கு­தலை எதிர்­கொண்டு வரும் நிலை­யில், இந்­தி­யா­வில் விலை­வாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் முத­லீட்­டுச் சந்­தை­யைப் பாதிக்க நேரி­டும். இத­னால் இந்­தி­யப் பொரு­ளி­யல் வளர்ச்­சி­யும் மீண்­டும் சரி­வைச் சந்திக்க வாய்ப்­புள்­ளது," என்று பொரு­ளியல் வல்­லு­நர்­கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

கடந்த ஆறு மாதங்­க­ளாக இந்­தி­யப் பொரு­ளி­யல் சரிவை எதிர்­கொண்­ட­தால் குடும்­பங்­களும் நிறு­வ­னங்­களும் பெரிய அள­விலான பாதிப்­பு­க­ளைச் சந்­தித்து வரு­கின்­றன. இது நிதித்­து­றை­யிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­வி­ட­லாம் என்­றும் அவர்­கள் எச்­ச­ரித்து இருக்­கின்­ற­னர்.

ஒட்­டு­மொத்­த­மாக, இந்த நிதி ஆண்­டில் நாட்­டின் பொரு­ளி­யல் 9.5% சுருங்­கக்கூடும் என்­பது அவர்­களின் கணிப்பு.

வலிமையை பலவீனமாக்கி விட்டதாக மோடி மீது சாடல்

இத­னி­டையே, இந்­தி­யப் பொரு­ளியல் இத்­த­கைய மோச­மான நிலைக்குச் சென்றதற்குப் பிர­த­மர் நரேந்­திர மோடியே கார­ணம் என காங்­கி­ரஸ் எம்.பி.யும் அக்­கட்­சி­யின் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி சாடி­யி­ருக்­கி­றார்.

"வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக இந்­தியா பொரு­ளி­யல் மந்­த­நிலைக்­குள் நுழைந்திருக்கிறது. பிர­த­மர் மோடி தமது செயல்­க­ளா­லும் கொள்­கை­க­ளா­லும் இந்­தி­யா­வின் வலி­மையை அதன் பல­வீ­ன­மாக மாற்­றி­விட்­டார்," என்று ராகுல் காந்தி தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.