40 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள் தயார்: இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம்

2 mins read
47e7b161-770a-436c-a8e0-1aea03edf153
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து தயாரிக்கப்படும் ஆஸ்டிராசெனக்கா தடுப்பூசி ஆகப்பெரிய அளவில் நவீன முறையில் இந்தியாவில் சோதிக்கப்பட்டு வருகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

பெங்­க­ளூரு: உல­கின் ஆகப்­பெ­ரிய தடுப்­பூசி நிறு­வ­ன­மான 'சீரம் இன்ஸ்­டி­டி­யுட் ஆஃப் இந்­தியா', நாற்­பது மில்­லி­யன் 'ஆஸ்­டிரா செனக்கா கொவிட்-19' தடுப்­பூசிகளைத் தயா­ரித்து வைத்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.

இந்­தத் தடுப்­பூசி, நோவாக்ஸ் தடுப்­பூ­சிக்­குப் போட்­டி­யாக விரைவில் களத்­தில் இறக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆஸ்­டிரா செனக்கா, நோவாக்ஸ் ஆகிய இரண்டு நிறு­வ­னங்­க­ளுமே அங்­கீ­கா­ரத்­துக்­கா­கக் காத்­தி­ருக்கின்­றன.

இறு­திக்­கட்ட சோதனை நடத்து வதற்­காக 1,600 பங்­கேற்­பா­ளர்­களை சேர்த்­துள்­ள­தாக சீரம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரிவித்­தது.

ஆக்ஸ்­ஃபோர்ட் பல்­க­லைக் கழகத்­து­டன் சேர்ந்து ஆஸ்­டிரா செனக்கா தடுப்­பூசி தயா­ரிக்­கப்­பட்டு வரு­கிறது. இது, இந்­தி­யா­வில் மனி­தர்­க­ளி­டம் சோதிக்­கப்­படும் ஆக நவீன தடுப்­பூசி என்­றும் செரம் குறிப்­பிட்­டது. இந்­திய மருத்­துவ ஆய்வு மன்­றத்­தின் ஒப்­பு­த­லுக்­குப் பிறகு தடுப்­பூசி பொது­மக்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­படும்.

ஆனால் நாற்­பது மில்­லி­யன் தடுப்­பூ­சி­களும் இந்­தி­யா­வில் மட்­டும்­தான் விநி­யோ­கிக்­கப்­படுமா என்­பது குறித்து சீரம், ஐசி­எம்­ஆர் ஆகிய இரண்­டின் பிர­தி­நி­தி­களும் கருத்து தெரி­விக்க மறுத்­து­விட்­ட­னர்.

உல­கில் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்ட நாடு­களில் 2வது இடத்­தில் உள்ள இந்­தி­யா­வில் மொத்­தம் 8.68 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். கிரு­மிக்கு 128,000 பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

இந்தியாவில் குறைந்தது இரண்டு உள்ளூர் நிறுவனங்கள் கொவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

அவற்­றில் 'டாக்­டர் ரெட்டி லாப்' எனும் மருந்­துத் தயா­ரிப்பு நிறு­வ­ன­மும் ஒன்று. ரஷ்யா தயா­ரித்­துள்ள தடுப்­பூ­சி­களை இது, இந்­தி­யா­வில் சோதித்து வரு­கிறது.

இவ்­வா­ரத் தொடக்­க­த்தில் ஃபைசரும் அதன் பங்­காளி நிறு­வ­ன­மான பயோ­என்­டெக்­கும் ஆரம்­பக்­கட்ட சோத­னை­யில் தங்­க­ளு­டைய தடுப்­பூ­சி­கள் 90 விழுக்­காடு வலு­வா­கச் செயல்­ப­டு­வதாக தெரி­வித்­தன.

இதனை இந்­தி­யா­வில் விநி­யோ­கிக்க இந்­திய அர­சாங்­கத்­து­டன் சேர்ந்து முயற்­சி­கள் எடுக்­கப்­படும் என்­றும் ஃபைசர் கூறி­யது.

குறிப்புச் சொற்கள்