அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எழுதிய புத்தகத்தில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் பற்றி கருத்துரைப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எழுதிய புத்தகத்தில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் பற்றி கருத்துரைப்பு

1 mins read
cb7eef87-e7ac-48bf-9e97-adfd026a9cf7
காங்கிரசின் துணைத்தலைவராக இருந்த ராகுல் காந்தி (வலது), டிசம்பர் 2017-ல் ஒபாமாவின் இந்திய பயணத்தின்போது அவரைச் சந்தித்தார். படங்கள்: ஏஎஃப்பி -

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா புதிதாக வெளியிடும் தனது அரசியல் நினைவுக் குறிப்பான, 'ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்' (The Promised Land) என்ற புத்தகத்தில் இந்திய அரசியல் தலைவர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ராகுல் காந்தி மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட, பிற நாடுகளின் பல தலைவர்கள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார் என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் "சாந்தமான பொருளியல் நிபுணர்," என அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக, புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிய கட்டுரையில் நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2009 முதல் 2017 வரை ஆட்சியில் இருக்கும்போது ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருந்தார்.

"ஒரு பதற்றமான, பாடங்களை முடித்துவிட்டு ஆசிரியரைக் கவர்வதற்காக காத்திருக்கும் மாணவரைப்போல் இருந்தார். ஆனால், அந்தப் பாடத்தில் விருப்ப ஆர்வமோ அல்லது அதனை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பமோ அவ்வளவாக இல்லாதவர்," என்று ராகுல் காந்தி பற்றி அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

இம்மாதம் 17ஆம் தேதி அந்தப் புத்தகம் வெளியிடப்பட உள்ளது.

ஒபாமா ஆட்சிக் காலத்தில், காங்கிரசின் துணைத்தலைவராக இருந்த ராகுல் காந்தி, டிசம்பர் 2017-ல் ஒபாமாவின் இந்திய பயணத்தின்போது அவரைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்