போலிசார் குவிப்பு

போலிசார் குவிப்பு

1 mins read
0a9f6f88-ece8-42d0-b6f3-cfa391fb4750
இந்தியாவில் கிருமித் தொற்று அபாயம் இருந்தாலும் தீபாவளிக்காக பொருட்களை வாங்க மக்கள் தயங்க வில்லை.ஹிமாச்சலபிரதேசம் தர்மசாலாவில் உள்ள சாலையோரக் கடையில் அகல் விளக்குகளை வாடிக்கையாளர் ஒருவர் வாங்கு கிறார்.படம்: இபிஏ -

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 12,000 போலிசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஜவுளி, வீட்டு உபயோகப் பொருட்கள், தங்க நகைகள் வாங்கு வதற்காக திநகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்பட கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் தலை காட்டலாம் என்பதால் போலிசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

சுமார் 12,000 போலிசார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை காலத்தில் சிறிய கடைகள், சாலையோர வியா பாரிகளிடம் ரவுடிகளின் தொல்லை அதிகம் இருக்கும்.

இதனைத் தடுக்க போலிஸ் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள ரவுடிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.

இதுவரையில் 200 பேர் நீதி மன்றத்தில் சரணடைந்து உள்ளனர். கடந்த மூன்று நாட்களாக போலிசார் நடத்திய வேட்டையில் சுமார் 162 ரவுடிகள் சிக்கியுள்ளனர்.