ஆரவாரமில்லாமல் நடைபெற்ற தினகரன் மகளின் நிச்சயதார்த்தம்

ஆரவாரமில்லாமல் நடைபெற்ற தினகரன் மகளின் நிச்சயதார்த்தம்

2 mins read
732c4830-232d-4d17-a6c8-151600d2b112
நிச்சயதார்த்த விழாவில் தினகரன். படம்: விகடன் இணையம் -

சென்னை: தமி­ழ­கத்­தின் பல்­வேறு அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளுக்கு இடையே டிடிவி தின­க­ரன் மக­ளின் நிச்­ச­ய­தார்த்­தம் ஆர­வா­ர­மின்றி நடை­பெற்­றுள்­ளது.

அம்மா மக்­கள் முன்­னேற்­றக் கழ­கத்­தின் பொதுச் ­செ­ய­லா­ளர் டி.டி.வி.தின­க­ர­னின் மகள் ஜெய­ஹ­ரி­ணிக்­கும் தஞ்­சா­வூ­ரில் பாரம்­ப­ரி­ய­மிக்க குடும்­பத்­தைச் சேர்ந்த காங்­கி­ரஸ் கட்­சி­யின் தஞ்சை தெற்கு மாவட்­டத் தலை­வ­ரான கிருஷ்­ண­சாமி வாண்­டை­யார் மகன் ராம­ நா­தன் துளசி அய்­யா­வுக்­கும் திரு­ம­ணம் செய்­வ­தற்­காக இரு­ த­ரப்­பி­லும் பேசி முடிவு செய்­யப்பட்டது.

தின­க­ர­னின் விருப்பத்திற்கு ஏற்ப சசி­கலா தலை­மை­யில் நிச்­ச­ய­தார்த்தத்தை நடத்த திட்­ட­மி­டப்­பட்­டது. ஆனால், சசி­கலா விடு­தலை பல்­வேறு கார­ணங்­க­ளால் தடை­பட்­ட­தால் முத­லில் நிச்­ச­ய­தார்த்த விழாவை எளிமையாக நடத்­தி­விட்டு பின்­னர் சசி­கலா தலை­மை­யில் திருமணத்தை பிர­ம்மாண்­ட­மாக நடத்­த­லாம் என தீர்மானிக்கப் பட்டது.

இதை­ய­டுத்து இம்­மா­தம் 11ஆம் தேதி சுவா­மி­மலை அரு­கே­யுள்ள தனி­யார் ரிசார்ட்­டில் நிச்­ச­ய­தார்த்த விழா நடை­பெற்­றது.

ஆனால் குறைந்த அள­வில் அழைப்­பி­தழ்­கள் அச்­ச­டிக்­கப்­பட்டு மிக­வும் நெருங்­கிய உற­வு­க­ளுக்கு மட்­டுமே அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

இதற்­காக ரிசார்­ட்டில் ஒரு கிலோ­மீட்­டர் தொலை­வுக்கு மின் அலங்­கார நுழை­வு­வா­யில் அமைக்­கப்­பட்­டது. மயில் போன்ற வடி­வில் விழா மேடை அலங்­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

தின­க­ரன் தம்பி பாஸ்­க­ரன், இள­வ­ரசி மரு­ம­கன் டாக்­டர் சிவ­கு­மார், அம­மு­க­வின் பொரு­ளா­ள­ரும் முன்­னாள் எம்­எல்­ஏ­வு­மான ரெங்­க­சாமி என மொத்­தமே அறுபது பேர் மட்­டுமே கலந்­து­கொண்­ட­னர். சசி­கலா தம்பி திவா­க­ரன் இதில் கலந்­து­கொள்­ள­வில்லை.

மாப்­பிள்ளை வீட்­டார் பிரம்­மாண்ட முறை­யில் சீர்­வ­ரி­சைத் தட்டு எடுத்து வந்­த­னர். தின­க­ரன் மனைவி அனு­ராதா ஓடோ­டிச் சென்று அவர்­களை வர­வேற்­றார். கிருஷ்­ண­சாமி வாண்­டை­யார், தங்­கள் குடும்­பத்­தி­னரை தின­க­ர­னி­டம் அறி­மு­கம் செய்­து­வைத்­தார்.

நிச்சயதார்த்த விழா என்றால் பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரே மேடையில் உட்காரவைத்து உறவினர்கள் அவர்களுக்குப் பொட்டு வைத்து வாழ்த்துவது தற்போதைய வழக்கம். ஆனால், பழைய வழக்கப்படியும் பாரம்பரிய முறைப்படியும் பெண் மட்டுமே மேடையில் அமர வைக்கப்பட்டார். ஜெயஹரிணிக்கு உறவினர்கள் சந்தனப் பொட்டு வைத்து வாழ்த்தி னர். மகளுக்கு நல்லபடியாக நிச்சய தார்த்தம் நடந்து முடிந்த பூரிப்பு தினகரன்-அனுராதா முகத்தில் தெரிந்தது. வரும் தை மாதத்தில் திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.

சசிகலா விடுதலை குறித்து உறுதியான தகவல் வெளியான பிறகே திருமண தேதி குறிக்கப்படும் எனத் தெரிகிறது.